×
 

#BREAKING: போர் நிறுத்தம் எதிரொலி..! முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை..!

இந்தியா பாகிஸ்தான் இடையே உடனடி போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவியது. கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பலமான பதிலடி இந்தியாவும் கொடுத்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் முதல் முறையாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவ அதிகாரிகளோடு தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது.

அதிமுக்கிய அறிவிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்த நேரடி பேச்சுவார்த்தையின் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING: உடனடியாக சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்! பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ்

இதையும் படிங்க: #BIG BREAKING: பாகிஸ்தானின் தற்காப்பு திறன்களை இந்தியா அழித்துவிட்டது.. மத்திய அமைச்சக அதிகாரிகள் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share