மகளிர் உலகக்கோப்பை… கைகுலுக்க மறுத்த இந்திய கேப்டன்…மீண்டும் சர்ச்சை…!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் கைக்குலுக்க மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 2 ஆம் வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் மற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் எனவும் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, 2022-ல் சாம்பியனாகியும், வரலாற்றில் ஏழு முறை வென்றும், மிக வலுவான அணியாகத் திகழ்கிறது. இந்தியா, தாய்நாட்டில் முதல் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படிங்க: ஆசியக்கோப்பை! இந்தியா - பாக். பலப்பரீட்சை… விளையாட்டை தாண்டிய உணர்வுகளின் புயல்
இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்து உள்ளது.
இந்த நிலையில், டாஸின்போது இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும், பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனாவும் கைகுலுக்கிக் கொள்ளாததால் சர்ச்சை ஏற்பட்டது. ஏற்கெனவே ஆடவர் கிரிக்கெட் போட்டியிலும் இரு நாட்டு கேப்டன்கள் கைகுலுக்காதது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசியக்கோப்பை! இந்தியா - பாக். பலப்பரீட்சை… விளையாட்டை தாண்டிய உணர்வுகளின் புயல்