இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!
இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம் தான் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தன்னிட்சையாக பெயர் மாற்றம் செய்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா, கடந்த காலத்திலும் சரி, இப்போதும், எதிர்காலத்திலும் அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது என்று கண்டித்துள்ளது.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா தன்னிட்சையாக மாற்றி அமைத்து அந்த பட்டியலை வெளியிட்டது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் பகுதிகளின் பெயரை சீனா மாற்றி அறிவித்ததற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையும் படிங்க: நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!
அது மட்டுமல்லாமல் சீனாவின் பெயர்மாற்றும் இந்த முயற்சி அபத்தமானது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சலப்பிரதேசம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை இதை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவின் இந்த பதிலடி வெளியான சில மணிநேரத்துக்குள், அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரையும், திபெத்தின் தென்பகுதியில் இருக்கும் சில பகுதிகளையும் பட்டியலிட்டு சீனா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக, மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா தன்னிட்சையாக பெயரை மாற்றுவது அபத்தமானது, இந்த செயலை கைவிட வேண்டும். எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டின்படி சீனாவின் இந்த செயல்களை, அத்தகைய முயற்சிகளை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, இப்போதும் இருக்கிறது, எப்போதும் இருக்கும் என்ற மறுக்க முடியாத உண்மை” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே சீனா அரசின் அதிகாரபூர்வ நாளேடான குலோபல் டைம்ஸ் நாளேட்டின் எக்ஸ் தளத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பயனாளிகல் குலோபல் டைம்ஸ் நாளேட்டின் சமூக வலைத்தளத்தை தொடர்பு கொண்டால் “ கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் எடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சித்தது, குலோபல் டைம்ஸ் நாளேடும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டது, குறிப்பாக இந்தியாவின் போர்விமானத்தை பாகிஸ்தான் விமானப்படையினர் சுட்டுவீழ்த்தினர் என தவறாக செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பியதால் மத்திய அரசு எக்ஸ் தளத்தை முடக்கியது.
அது மட்டுமல்லாமல் இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் குலோபல் டைம்ஸ் நாளேடு ஒருமுறைக்கு இருமுறை, உண்மை பரிசோதனை செய்து உண்மைத்தன்மையை அறிந்து செய்தி வெளியிட வேண்டும். இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடக்கூடாது என்று குலோபல் டைம்ஸ் நாளேட்டை மத்திய அரசு கண்டித்திருந்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!