×
 

ஐநா சபையில் பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியா! உலகமே பார்க்க மரண அடி! தரமான சம்பவம்!

இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சி செய்யும். உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக சாடினார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தின் போது, பாகிஸ்தான் இந்தியாவை குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக பதிலடி கொடுத்து, "இனப்படுகொலை நடத்திய பாகிஸ்தான், இந்தியாவை குற்றம்சாட்டுவது பொய் பிரசாரம். உலகம் உங்களை உன்னிப்பாக கவனிக்கிறது" என எச்சரித்தார். 

1971-ல் ஆபரேஷன் சர்ச்லைட் மூலம் 4 லட்சம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததையும், சமீபத்தில் கைபர் பக்துங்க்வாவில் 30 அப்பாவி மக்களை குண்டுவீசி கொன்றதையும் சுட்டிக்காட்டி பாகிஸ்தானை அம்பலப்படுத்தினார்.

நியூயார்க்கில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், "காஷ்மீரில் பெண்கள் போர்ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்" என இந்தியாவை குற்றம்சாட்டினார். 

இதையும் படிங்க: SKY-யின் தேசபக்தி! சூர்யகுமார் யாதவ் செய்த செயல்! நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

இதற்கு பதிலளித்த ஹரிஷ், "பாகிஸ்தானின் பொய் பிரசாரம் துரதிர்ஷ்டவசமானது. இந்தியா பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரத்தில் முன்னோடியாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் தனது மக்கள் மீதே குண்டு வீசி, இனப்படுகொலைகளை நடத்திய வரலாறு கொண்டது" எனக் கூறினார்.

ஹரிஷ், 1971-ல் கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) நடந்த ஆபரேஷன் சர்ச்லைட்டை சுட்டிக்காட்டினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் டிக்கா கான் தலைமையில், வங்கமொழி பேசுவோரை ஒடுக்க, 4 லட்சம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, 10 லட்சம் பேரை கொன்று இனப்படுகொலை நடத்தியதாக குற்றம்சாட்டினார். இது வங்கதேசத்தின் விடுதலைப் போருக்கு வித்திட்டது.

மேலும், சமீபத்தில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் "பயங்கரவாதிகளை ஒடுக்குவதாக" கூறி, பாகிஸ்தான் ராணுவம் 30 அப்பாவி மக்களை, அதில் குழந்தைகளையும் குண்டுவீசி கொன்றதை அவர் குறிப்பிட்டார். "இப்படிப்பட்ட நாடு இந்தியாவை குற்றம்சாட்டுவது அபத்தம். உலகம் பாகிஸ்தானின் பொய்களை உன்னிப்பாக கவனிக்கிறது" என அவர் எச்சரித்தார்.

இந்தியா, ஜம்மு-காஷ்மீரில் பெண்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பு, கல்வி, தொழில்முனைவு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் ஹரிஷ் விளக்கினார். "பாகிஸ்தான் இந்த சபையை தவறாக வழிநடத்த முயல்கிறது. 

ஆனால், உலக நாடுகள் அதன் உண்மை முகத்தை அறியும்" என அவர் திட்டவட்டமாக கூறினார். இந்த விவாதம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை மீண்டும் உலக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிலடி, ஐநாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சொந்த மக்கள் மீதே குண்டுவீச்சு! ஐ.நாவில் அசிங்கப்பட்ட பாக்.,! உலக நாடுகள் முன்பு இந்தியா தரமான சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share