×
 

பட்ஜெட்டில் வங்கதேசம், ஈரானுக்கு விழுந்த பேரிடி!! உதவி நிதியில் கை வைத்த நிர்மலா! இந்தியா அதிரடி!

பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு உதவி நிதி ஒதுக்கீடு மீண்டும் இடம் பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சகத்துக்கு மொத்தம் 22,118 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 20,516 கோடியை விட சற்று அதிகம். ஆனால் சில நாடுகளுக்கு நிதி குறைக்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

பூட்டான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு பூட்டானுக்கு 2,289 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு 800 கோடி, இலங்கைக்கு 400 கோடி, மாலத்தீவுக்கு 550 கோடி (கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைப்பு), ஆப்கானிஸ்தானுக்கு 150 கோடி, மியான்மருக்கு 300 கோடி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 225 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு ஒதுக்கீட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு 120 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 60 கோடியாக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதும், இந்தியாவுடன் மோதல் போக்கு கடைபிடிப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 120 கோடியில் 34.48 கோடி மட்டுமே செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேண்டாமே என கெஞ்சிய நிர்மலா சீதாராமன்!! கறார் காட்டி கண் சிவந்தார் மோடி! பிப்.,1-ல் நடந்தே தீரும்!

மற்றொரு அதிரடி முடிவு: ஈரானில் உள்ள சாபஹார் துறைமுக திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதற்கு 400 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் ஈரானுடனான வர்த்தகத் தடைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் முக்கிய திட்டமாக சாபஹார் இருந்தாலும், தற்போதைய அமெரிக்க அரசியல் சூழல் இதற்கு தடையாக உள்ளது.

இந்த பட்ஜெட் மூலம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றங்கள் தெரிகின்றன. நட்பு நாடுகளுக்கு உதவி தொடர்கிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகளுக்கு நிதி குறைக்கப்படுகிறது. வங்கதேசம் மற்றும் ஈரான் உதாரணங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன. இது இந்தியாவின் “நண்பர்களுக்கு நட்பு, எதிரிகளுக்கு எச்சரிக்கை” என்ற புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

இந்த மாற்றங்கள் தென்னாசியா மற்றும் மத்திய கிழக்கு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பு, சாபஹார் திட்டத்தின் எதிர்காலம் ஆகியவை இனி முக்கிய விவாதமாக இருக்கும். 

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 8வது கொலை!! வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share