×
 

‘அவங்க கொடுக்குறதும், நீங்க வாங்குறதும் ஈஸிதான்’.. வரி செலுத்துவோருக்குத்தான் சுமை அதிகரிக்கும்.. உச்சநீதிமன்றம் விளாசல்..!

ரேஷன் பொருட்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அரசியல் புகழுக்காக மக்களுக்கு வினியோகிப்பது எளிதான காரியம்தான்.

ரேஷன் பொருட்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அரசியல் புகழுக்காக மக்களுக்கு வினியோகிப்பது எளிதான காரியம்தான். ஆனால்  வரிசெலுத்துவோர்தான் இலவச ரேஷன் பொருட்களுக்கான சுமையை சுமக்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவுப் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு ஏற்கெனவே கொரோனா காலத்தில் தன்னார்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஸ் மந்தர், ஜெக்தீப் சிகோர் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்திருந்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, பணப்பரிமாற்றம், நலத்திட்டங்களை வழங்கிட வேண்டும் என்று கொரோனா 2வது அலையின்போது வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில் “இப்போது 2025ம் ஆண்டாகிவிட்டது. இன்னும் வறுமை என்ற விஷயத்தை பிடித்துக்கொண்டிருப்பீர்களா. மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளையும், இலவச ரேஷன் பொருட்களையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துவிட்டனர். 

இதையும் படிங்க: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி.. மே 14ம் தேதி பதவியேற்கிறார் பிஆர் கவாய்..!

மத்திய அரசு கொடுக்கும் ரேஷன் பொருட்களை வாங்கி மக்களிடம் அரசியல் செல்வாக்கை உயர்த்த மாநில அரசுகள் வழங்குவது எளிதுதான். ஆனால், இதன் சுமை யாருக்கு, வரி செலுத்துவோருக்குத்தான். கட்டுமானத் திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு எங்கிருந்து பணம் வரும், இந்த விஷயங்களுக்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

2011ம் ஆண்டில் இருந்த அதே வறுமையில்தான் இப்போதும் தேசம் இருக்கிறதா. கடைசியாக எப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில் “ நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது, அதோடு ஏழைகளும், வறுமையில் வாழ்வோரும் அதிகரித்துள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்துதான் நடக்கிறது. மானியத்தில் உணவுப் பொருட்களை கிராமங்களில் வாழும் மக்கள் 75% பேரும், நகரங்களில் வசிப்போர் 50% பேரும் வாங்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில் “ பூஷன் கருத்தை நான் ஏற்கவில்லை, தேசிய உணவுப் பாதுகாப்பில் தற்போது 81.35 கோடி பேர் பயன் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆபாச காட்சிகள்.. அமேசான், நெட்பிளிக்ஸிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share