×
 

ரவி நீரை நிறுத்தப்போகும் இந்தியா..!! தண்ணீரின்றி தவிக்கும் பாகிஸ்தான்..!! ஆட்டம் ஆரம்பம்..!!

பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நீரைத் தடுக்கும் நடவடிக்கை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நீர் பகிர்வு விவகாரத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, அடுத்த நாளே (ஏப்ரல் 23) இந்தியா இந்த முடிவை எடுத்தது. 

இதுவரை பல மோதல்கள் இருந்தபோதிலும், ஒப்பந்தத்தை நிறுத்தியது இதுவே முதல் முறை. இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கும், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள் இந்தியாவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட நிலையில், இந்தியா தனது தேவைகளுக்கு ஏற்ப நீரைப் பயன்படுத்த முடியும். 

இதையும் படிங்க: "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

பாகிஸ்தானின் விவசாயம் 80-90 சதவீதம் சிந்து நதி அமைப்பைச் சார்ந்துள்ளது. நீர் சேமிப்பு திறன் குறைவாக இருப்பதால், நீர் இல்லாத நிலை ஒரு மாதத்திற்கு மேல் தாங்க முடியாது என்ற அச்சம் அங்கு நிலவுகிறது. இதற்கிடையே, ரவி நதியின் உபரி நீரை பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுக்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள ஷாபூர் கண்டி அணைத் திட்டம் (Shahpur Kandi Dam) மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் நீர்வள அமைச்சர் ஜாவேத் அகமத் ராணா இதை உறுதிப்படுத்தியுள்ளார். அணை செயல்பாட்டுக்கு வந்தவுடன், ரவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் உபரி நீர் முழுமையாகத் தடுக்கப்படும். இதனால், கோடை காலத்தில் வறட்சியால் பாதிக்கப்படும் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு நீர் திருப்பி விட முடியும்.

இத்திட்டம் 1979இல் தொடங்கப்பட்டது. 1982இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால், பஞ்சாப்-ஜம்மு காஷ்மீர் இடையே ஏற்பட்ட சர்ச்சைகளால் பணிகள் தடைபட்டன. 2008இல் தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 3,394.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அணை 55.5 மீட்டர் உயரம் கொண்டது. பஞ்சாப் அரசு 80 சதவீதம் (2,694.02 கோடி) நிதி அளித்துள்ளது. மத்திய அரசு 20 சதவீதம் (700.45 கோடி) வழங்கியுள்ளது. அணையுடன் 7.7 கி.மீ. நீள புனல் மின் நிலையமும் உள்ளது.

இதன் மூலம் பஞ்சாப்பில் சுமார் 5,000 ஹெக்டேர் நிலமும், ஜம்மு-காஷ்மீரின் கதுவா-சம்பா பகுதிகளில் 32,173 ஹெக்டேர் நிலமும் பாசன வசதி பெறும். சிந்து ஒப்பந்தம் இருந்தாலும் ரவி நதி மீது இந்தியாவுக்கு பிரத்தியேக உரிமை உள்ளதால், இத்திட்டத்திற்கு எவ்வித தடையும் இல்லை. 

ஒப்பந்த நிறுத்தத்தால், சவால்கோட், ரட்லே, பர்சர், பகல்துல், குவார், கிரு, கீர்த்தாய் I & II உள்ளிட்ட பல நீர்மின் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் நீர் பயன்பாட்டை மேம்படுத்தும். இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு இரட்டை அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ரவி நதி உபரி நீர் தடைபடுவதுடன், சிந்து அமைப்பு நீரும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

இதையும் படிங்க: டி20 உலக கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் பச்சைகொடி - பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share