×
 

அலறும் எதிரிகள்..! இந்தியா இறக்கிய சி-17 குளோப் மாஸ்டர் விமானம்.. 4 மடங்கு அதிகரிக்கும் பலம்..!

எதிரிகளின் ரேடார்களால் கண்டறியப்படாமல் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்திய விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம் முதல் முறையாக கார்கில் விமானப் பாதையில் தரையிறங்கியது. அதன் முதல் சோதனை தரையிறக்கம் இன்று சற்று முன்  வெற்றிகரமாக நடைபெற்றது. இது இந்திய விமானப்படையின் மாபெரும் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது விமானப்படையின் பெரும் சுமைகளை தூக்கிச் செல்லும் இப்போது இருக்கும் ராணுவ விமானங்களைவிட, நான்கு மடங்குக்கும் மேலாக  சுமக்கும் திறனை அதிகம் கொண்டது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பல்வேறு இராணுவ நிலைகளுக்கு வீரர்களையும், தளவாடப் பொருட்களையும் கொண்டு செல்வது இனி எளிதாக இருக்கும். பனிப்பொழிவு ஏற்படும்போது, ​​சாலைகள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருக்கும். விமானப்படை விமானங்கள் மட்டுமே பொருட்கள், இராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களை கொண்டு செல்வதற்கான ஒரே வழிமுறையாக இருந்தது.

இதுவரை, கார்கில் விமான தளத்திற்கு என்-32 மற்றும் சி-130 விமானங்கள் மூலம் மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டு வந்தன. என்-32 சுமார் 4-5 டன் எடையையும், சி-130 சுமார் 6-7 டன் எடையையும் சுமந்து செல்லும். ஆனால் சி-17 குளோப் மாஸ்டரின் சுமை சுமக்கும் திறன் 25 டன்களுக்கு மேல் உள்ளது. குளிர்காலத்தில் இந்த திறன் 35 டன்களாக அதிகரிக்கும். பொருட்களைக் கொண்டு இறக்க செய்ய சி-130 நான்கு சுற்றுகள் பறக்க வேண்டியிருக்கும். ஆனால் சி-17 ஒரு சுற்றில் அதனை நேரடியாக கொண்டு சென்று இறக்க முடியும். சி-17 தரையிறங்கும் சோதனை பகல் நேரத்தில் நிகழ்த்தப்படும். எனவே ஆரம்ப கட்டத்தில் இந்த விமானம் பகல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

இதையும் படிங்க: "துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்"... செங்கோட்டையனின் ஆவேச கருத்தால் அதிமுகவில் சலசலப்பு.!

கடந்த ஆண்டு ஜனவரியில், இந்திய விமானப்படை தனது போக்குவரத்து விமானமான சி-130ஜெ-வை முதல் முறையாக இரவில் கார்கில் விமானப் பாதையில் தரையிறக்கியது. பின்னர் முதல் முறையாக கார்கிலில் இரவில் ஒரு நிலையான இறக்கை விமானம் தரையிறங்கியது. இந்தப் பயிற்சியின் போது விமானப்படை வீரர்கள் இந்த விமானம் நிலப்பரப்பில் இருந்து பார்ப்பவர்கள், இந்த விமானத்தை காணமுடியாத வகையில் மறைப்புப் பணிகளைச் செய்ய நிறுத்தப்பட்டனர். 

நிலப்பரப்பில் இருந்து மறைத்தல் என்பது எதிரிகளின் ரேடாரைத் தவிர்க்க நிலப்பரப்பு போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது. அதாவது மலைகள், காடுகள் போன்ற காட்சியமைப்பு தான் எதிர்கள் நம் விமானம் மேலே பறக்கும்போது கண்ணுக்கு தெரியும். இதன் மூலம் எதிரிகளின் ரேடார்களால் கண்டறியப்படாமல் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இதையும் படிங்க: விஷ ஊசிப்போட்டு காதலியை தீர்த்துக்கட்டிய காதலன்...போலீஸில் சிக்கிய 2 பெண்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share