தணியாத பற்று.. சேவையாற்ற அழையுங்கள்..! தாமாக முன் வந்த EX.SOLDIERS..!
நாட்டுக்காக சேவை செய்ய தயாராக உள்ளோம் என குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தியா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய இந்தியா பல தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு காஷ்மீரில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய பாகிஸ்தானின் முயற்சியை வான்வெளியிலேயே இந்தியா முறியடித்தது. அது மட்டுமல்லாது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்திய இந்தியா துவம்சம் செய்தது.
இதையும் படிங்க: நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம் இது..! இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில், போர் பதற்ற நிலையில், நாட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளனர். மேலும் நாட்டுக்கு சேவையாற்ற தயாராக உள்ளோம் என்று ராணுவ தளபதிக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டாக கடிதம் எழுதி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திரும்பிய பக்கமெல்லாம் அடி.. பாக். ராணுவம் மீது பலூச் விடுதலைப் படையும் தாக்குதல்!!