அனைத்தையும் அழித்துவிட்டோம்; எதிர்கால மிஷன்களை மேற்கொள்ள தயார்.. இந்திய ராணுவம் அதிரடி!!
எந்தவொரு எதிர்கால மிஷன்களை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியா வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் என்ன ஆனது? பொங்கி எழுந்த உமர் அப்துல்லா... காதை கிழிக்கும் வெடி சத்தங்கள்!!
இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் குறித்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் இந்த விவகாரத்தில் தலையிட்டது பரிதாபம். பாகிஸ்தானுக்கு இந்தியா தக்கப் பதிலடி கொடுத்தது. உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியது. வலிமையான வான் பாதுகாப்பை உருவாக்கியதில் அரசுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை ஏவியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் அதை முறியடித்தோம். எங்கள் அனைத்து ராணுவத் தளங்களும் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளன.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மிஷன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். தேவை ஏற்பட்டால் எந்தவொரு எதிர்கால மிஷன்களை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய வைஸ் அட்மிரல் பிரமோத், முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்ததால் எந்தவொரு ட்ரோன்களும் எல்லைக்கு அருகே கூட வரவில்லை. எதிரியைப் பல நூறு கிலோமீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய கொடியை தொட்டதும் முடிவுக்கு வந்த போர்.. இந்தியா- பாக். போர் நிறுத்தத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு!!