×
 

ரயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ₹1000 அபராதம்: இந்திய ரயில்வே அதிரடி!

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்பவர்களுக்கான அபராதத் தொகையை ரூ.500-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளைக் கொட்டி அசுத்தம் செய்பவர்களுக்கான அபராதத் தொகையை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி இந்திய ரயில்வே நிர்வாகம் அதிரடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தூய்மையைப் பராமரிக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ஒருசில பயணிகள் ரயில் பெட்டிகளிலும், ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட குப்பைகளை வீசி அசுத்தம் செய்யும் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பயணிகளிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கிலும் அபராதத் தொகையை இருமடங்காக உயர்த்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, ரயில்கள் மற்றும் நிலைய வளாகங்களில் எச்சில் துப்புதல், குப்பைகளை வீசுதல் உள்ளிட்ட அசுத்தம் செய்யும் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் இனி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

ரயில் நிலைய நடைமேடைகள், ரயில்களின் உட்பகுதிகள் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் இந்த விதிமீறல்களைக் கண்காணிக்க டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (RPF) கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் ரயில்களையும் ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

இதையும் படிங்க: பீரங்கிகளை வேட்டையாடும் அதிநவீன ஜேவலின் ஏவுகணை! அமெரிக்காவுடன் இந்தியா மெகா ஒப்பந்தம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share