×
 

"டிக்கெட் ரேட் கம்மி பண்ணியாச்சு!" RailOne ஆப் யூஸ் பண்ணுங்க.. 3% தள்ளுபடி வாங்குங்க!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ‘RailOne’ செயலி மூலம் டிக்கெட் எடுப்போருக்கு 3 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, RailOne மொபைல் செயலி வாயிலாக முன்பதிவில்லா (Unreserved) டிக்கெட்டுகளைப் பெறும் பயணிகளுக்கு, பயணக் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடியாக வழங்கப்படும். இந்தச் சலுகைத் திட்டம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை என மொத்தம் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

ரயில்வேயின் இந்த அறிவிப்பு குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஆர்-வாலட் (R-Wallet) பணப்பரிப்பை பயன்படுத்தி டிக்கெட் எடுப்போருக்கான 3 சதவீத கேஷ்பேக் சலுகை எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலம் RailOne செயலியைப் பயன்படுத்தும் பயணிகள் இரட்டிப்புப் பலன்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், சொந்த ஊர் செல்லும் சாதாரண வகுப்புப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி காற்று மாசு... எதுவுமே சரியில்ல..! மேலாண்மை ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்...!

பயணிகள் தங்களது அலைபேசியிலேயே டிக்கெட்டுகளைச் சரிபார்த்துக் கொள்ளும் வசதி இருப்பதால், இனி காகித டிக்கெட்டுகளைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, பயண நேரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்தும். இந்தத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, சலுகைக் காலத்தை மேலும் நீட்டிப்பது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகன் வழக்கில் உத்தரவு… என்னென்ன புகார்கள்?.. தணிக்கை குழுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share