×
 

பாகிஸ்தான் குறிவைத்த அமிர்தசரஸ் ‘பொற்கோயில்’: அரணாக இருந்த ‘ஆகாஷ் கவசம்’..!

பாகிஸ்தான் குறிவைத்த அமிர்தசரஸ் பொற்கோயிலை அரணாக இருந்து பாதுகாத்தது ஆகாஷ், எல்-70 பாதுகாப்பு தளவாடங்கள் தான்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இலக்காக இருந்தது இந்தியாவில் இருந்த மக்களும், வழிபாட்டுத் தலங்களும்தான், அதில் குறிப்பாக அமிர்தசரஸ் பொற்கோயிலைத் தாக்க திட்டமிட்டிருந்த நிலையில் அதை பாதுகாத்தது ஆகாஷ், எல்-70 பாதுகாப்பு தளவாடங்கள்தான் என ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்து தீவிரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் அழித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய எல்லைப்பகுதிகளில் ஏவி தாக்குதல் நடத்தியது, ஆனால், இதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்த நிலையில் அமெரிக்க தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர்: பட்டைய கிளப்பிய உள்நாட்டு தயாரிப்பு ‘ஆகாஷ்’ ஏவுகணை.. மத்திய அரசு பெருமிதம்..!

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் போர் சட்டங்களை மறந்து குடிமக்கள் மீதும்,வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை குறிக்கோளாக வைத்திருந்தது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 15-வது இன்பேன்ட்டரி டிவிசன், மேஜர் ஜெனரல் கார்த்தி சி சேஷாத்ரி இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சட்டப்பூர்வமாக இந்தப் பகுதியில் மட்டும்தான் தாக்க வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்கவில்லை. மாறாக இந்தியப் பகுதியில் மக்கள் வசிப்பிடங்களிலும், மதவழிபாட்டுத் தலங்களையும் நோக்கி தாக்குதலைத் திருப்பியது. 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சட்டவிதிகள் பின்பற்றி தாக்குதல் நடத்தாது என்பது என்று முன்கூட்டியே எங்களுக்குத் தெரியும் என்பதால், எதிர்பார்த்தபடியே நாங்கள் ராணுவ தளவாடங்களை தயாராக வைத்திருந்தோம். மக்கள் வசிக்கும் பகுதிகள், வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க தயாராக இருந்தோம், அதிலும் குறிப்பாக அமிர்தசரஸ் பொற்கோயில் மீது பாகிஸ்தான் ராணுவம் குறியாக இருந்தது.

இதனால் நாங்கள் நவீன வான் பாதுகாப்பு தளவாடங்களையும், பொற்கோயிலைச் சுற்றி குடைபோன்ற வான்பாதுகாப்பு தளவாடங்களை நிறுத்தினோம். 

மே 8ம் தேதி அதிகாலை பாகிஸ்தான் பகுதியில் இருந்து அதிக அளவு ட்ரோன்கள் இந்தியப் பகுதியை நோக்கி ஏவிவிடப்பட்டன, இது தவிர நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளும் ஏவப்பட்டன. ஏற்கெனே இந்திய ராணுவம் தயாராக இருந்ததால், இந்த ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் அடித்து சுக்குநூறாக்கியது இந்தியாவின் போர் தளவாடங்கள். 

அதிலும் பொற்கோயில் மீது சிறிய கீறல்கூட படவிடாமல் நாங்கள் குடைபோன்று பாதுகாப்பை அமைத்து கண்காணித்தோம்.  பாகிஸ்தானிலிருந்து வானில் வந்த ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே மடக்கி சுட்டுவீழ்த்தினோம்.  

இந்த தாக்குதலை வெற்றிகரமாக்கவும், பொற்கோயில் மீது சிறிய கீறல்கூடபடாமல் பாதுகாத்ததில் இந்தியாவின் ஆகாஷ் பாதுகாப்பு அம்சமும், எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளும் முக்கியமானவை. இரு பாதுகாப்பு அம்சங்கள்தான், வானிலேயே பாகிஸ்தான் ட்ரோன்களையும், ஏவுகணைகளை மறித்து அழித்தன.

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் பல நகரங்களைத் தாக்க இலக்கு வைத்திருந்தது. குறிப்பாக அமிர்தசரஸ், ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், லூதியானா, ஜலந்தர், சண்டிகர், பூஜ் ஆகியவை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தியாவின் அதிநவீன ஐசியுஏஎஸ் மற்றும் வான் பாதுகாப்பு அம்சங்களால் அனைத்துக்கும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இவ்வாறு கார்த்தி சேஷாத்திரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share