×
 

16,000 அடி உயரத்தில் சாலை! சீனா எல்லையில் இமயமலையில் இந்திய ராணுவம் அதிரடி!

உத்தரகண்டில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லை வரை செல்லும் நீலாபானி - முலிங் லா இடையே, 16,000 அடி உயரத்தில், 32 கி.மீ., துாரத்துக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அ ரசு துவங்கி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியுடன் இணைக்கும் முக்கியமான முலிங் லா மலைப்பகுதிக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த புதிய சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நீலாபானி முதல் முலிங் லா வரை 32 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இமயமலையில் சுமார் 16,134 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த சாலை அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

முலிங் லா என்பது பழங்காலத்தில் இந்தியா - திபெத் இடையேயான வர்த்தக மற்றும் பயணப் பாதையாக விளங்கிய மலைப்பகுதி ஆகும். தற்போது இங்கு சாலை வசதி இல்லாததால், நீலாபானியில் இருந்து மலையேற்றம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அடப்பாவி... ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்...! அதிரடி சஸ்பென்ட்...!

முலிங் லாவை அடைய ஐந்து நாட்கள் நடைப்பயணம் தேவைப்படுகிறது. இந்நிலையில், எல்லை சாலை நிறுவனம் (பி.ஆர்.ஓ.) மூலம் இந்த சாலை அமைக்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதற்காக சுமார் 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பி.ஆர்.ஓ. நிறுவனங்கள் இடம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் மலை, பாறை, மண் வகைகளை ஆய்வு செய்து சாலை அமைக்க ஏற்ற இடங்களை தீர்மானிக்கும். பனிச்சரிவு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்கும். 

அதன்பிறகு உண்மையான சாலை கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்த சாலை மூலம் அசாதாரண சூழல்களில் சீன எல்லைக்கு இந்திய படைகளை சில மணி நேரங்களில் கொண்டு செல்ல முடியும். தற்போது நாட்கள் ஆகும் பயணம் குறையும்.

பி.ஆர்.ஓ. அதிகாரிகள் கூறுகையில், 2020-ல் லடாக்கில் சீனப்படைகளுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் சாலை, பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த உயர்மட்ட மலைச்சாலை அமைக்கப்படுகிறது. இமயமலையில் இத்தகைய சாலை அமைப்பது மிகுந்த சவால்களை கொண்டது என்று தெரிவித்தனர்.

இந்த திட்டம் இந்தியாவின் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, உத்தரகண்ட் பகுதியில் ராணுவ இயக்கங்களை எளிதாக்கும். உலகளாவிய அளவில் எல்லை உட்கட்டமைப்பில் இந்தியாவின் முன்னேற்றத்தை இது காட்டுகிறது.

இதையும் படிங்க: கிராம மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share