×
 

தங்கம் மீது ‘கிரேஸி’யாகும் இந்தியர்கள்! சிறு கடனில் 53% பெருகிய தங்கக் கடன்!! 14.5 லட்சம் கோடி ரூபாய் உச்சம்!

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நம் நாட்டில் சிறு கடன் வளர்ச்சியில் தங்க கடன்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக, கிரிப் என்ற நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் 2025) இந்தியாவின் சிறு கடன் (microfinance) துறையில் தங்க நகைக் கடன்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. கிரிப் (CRIF) அறிக்கையின்படி, கடந்த ஆண்டைவிட தங்கக் கடன் வளர்ச்சி 53% உயர்ந்து, மொத்த சிறு கடன் போர்ட்ஃபோலியோவில் 27% பங்கைப் பிடித்துள்ளது. செப்டம்பர் 2025 இறுதிக்குள் தங்க நகைக் கடன் மொத்தம் 36% உயர்ந்து 14.5 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத உச்சம்!

பொதுத்துறை வங்கிகள் தான் இந்த ‘கோல்ட் ரஷ்ஷில்’ முன்னிலை வகிக்கின்றன. SBI, Canara Bank, Bank of Baroda போன்றவை அதிகளவில் தங்க நகைக் கடன் வழங்கியுள்ளன. ஆனால், இப்போது வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களும் இந்த துறையில் பாய்ந்துள்ளன. முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், IIFL ஃபைனான்ஸ், கோத்ரெஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை அடுத்த ஒரு ஆண்டில் மட்டும் 3,000 புதிய தங்கக் கடன் கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளன.

தங்க விலை தொடர்ந்து உச்சம் தொடுவதால், மக்கள் தங்கள் வீட்டு நகைகளை அடமானம் வைத்து உடனடி பணம் தேடுகின்றனர். விவசாயிகள், சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், இளம் தொழில்முனைவோர் என அனைத்துத் தரப்பினரும் தங்கக் கடனை நாடுகின்றனர். வட்டி விகிதம் குறைவு (9-14%), ஆவணங்கள் தேவையில்லை, 24 மணி நேரத்தில் பணம் கிடைப்பது என்பதால் தங்கக் கடன் பிரபலமாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆபத்தாகும் AI!! பெங்களூரு ஐடி ஊழியரின் விஷம செயல்! அச்சத்தில் மக்கள்!

கிரிப் அறிக்கை கூறுவதாவது:  “தங்கக் கடன் இப்போது சிறு கடன் துறையின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிவிட்டது. கிராமப்புறங்களில் 60%க்கும் மேல் தங்கக் கடன் வளர்ச்சி பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் அதிக தங்கக் கடன் வழங்கப்படுகிறது.”

ஆர்பிஐயும் தங்கக் கடனுக்கு 90% LTV (Loan-to-Value) வரை அனுமதி அளித்துள்ளதால், ஒரு கிராம் தங்கத்துக்கு ₹5,500-₹6,000 வரை கடன் கிடைக்கிறது. இதனால் மக்கள் தங்கத்தை ‘ATM’ ஆகப் பயன்படுத்துகின்றனர். NBFCக்கள் இதைப் பயன்படுத்தி, கிராமம் தோறும் புதிய கிளைகள் திறக்கின்றன.

ஆனால், நிபுணர்கள் எச்சரிப்பது என்னவென்றால்: தங்க விலை குறைந்தால் கடன் திரும்பப் பெறுவதில் சிக்கல் வரலாம். அதேநேரம், தங்கக் கடன் என்பது இந்தியக் குடும்பங்களுக்கு ‘நெருக்கடி கால காப்பீடு’ போல ஆகிவிட்டது என்கிறார்கள் பொருளாதாரசியல் ஆய்வாளர்கள். மொத்தத்தில் 14.5 லட்சம் கோடி ரூபாய் தங்கக் கடன்… 3,000 புதிய கிளைகள்… 53% வளர்ச்சி – இந்தியாவின் ‘கோல்ட் மேனியா’ இன்னும் நீடிக்கப் போகிறது!

இதையும் படிங்க: சுவாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! தேவஸம் போர்டு அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share