×
 

வலுவடையும் இந்தியா - ரஷ்யா உறவு! அதிபர் புடினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சா் ஜெய்சங்கா் ரஷிய தலைநகா் மாஸ்கோ சென்றாா். அங்கு அவா் புதினை சந்தித்துப் பேசினாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள வருடாந்திர இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டு முன்னேற்பாடுகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் பற்றியும் இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பில் இந்திய-ரஷ்ய அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை இன்று மாஸ்கோவில் சந்தித்து பேசினேன். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை தெரிவித்தேன். வருடாந்திர இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டுக்கு நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் பற்றியும் விவாதித்தோம். இந்திய-ரஷ்ய உறவை மேலும் வலுப்படுத்துவதில் புதினின் கண்ணோட்டங்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் மிகுந்த மதிப்பளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், SCO அமைப்பில் இடம்பெற்றுள்ள பிற நாடுகளின் தலைவர்களுடன் புதினை சந்தித்ததாகவும் ஜெய்சங்கர் தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார். SCO தலைவர்கள் கூட்டத்தில் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்தின், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், ஈரான் துணை அதிபர் முகமது ரெசா அரேப், பெலாரஸ் பிரதமர் அலெக்ஸாண்டர், கஜகஸ்தான் பிரதமர் ஒல்ஜாஸ் பெக்தெனோவ், SCO பொதுச் செயலர் நூர்லான் யெர்மெக்பாயேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மக்கள் வாழ்வை அழித்து அமைப்பது தொழிற்பேட்டைகளா? கல்லறைகள்… சீமான் விளாசல்…!

இந்த சந்திப்பு, இந்திய-ரஷ்ய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு, பாதுகாப்பு, வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆழமானது. வருடாந்திர உச்சி மாநாடு, இரு நாடுகளின் தலைவர்களிடையேயான இணக்கத்திற்கு மேலும் வாய்ப்பளிக்கும்.

ஜெய்சங்கரின் இந்தப் பயணம், SCO அமைப்பின் மூலம் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலக அளவிலான சவால்களுக்கு தீர்வு காணவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... விவசாயிகளுடன் கலந்துரையாடல்..! விழாக்கோலம் பூண்ட கோவை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share