சொத்துவரி முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம்... மதுரை மேயரின் கணவர் பொன்வசந்திற்கு ஜாமீன்...!
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் கைதாகி இருந்த மேயரின் கணவர் பொன்வசந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி பொன் வசந்த் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம், மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலான சொத்து வரி முறைகேடு குறித்து மையமாகக் கொண்டது. இந்த ஊழல் புகார் முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் கவுன்சிலர்களால் எழுப்பப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள், முக்கியமாக தனியார் கட்டடங்களுக்கு வரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை மையமாகக் கொண்டவை. இந்த முறைகேடு மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சியின் ஆன்லைன் வரி வசூல் முறையில், அதிகாரிகளின் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, சிலர் சொத்து வரியை முறைகேடாகக் குறைத்து நிர்ணயித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த விசாரணையில், மண்டலம் 3 இல் அதிக அளவில் முறைகேடு நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமார், மண்டலம் 3 தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன் உள்ளிட்ட 8 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். மேலும், 19 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.ஆகஸ்ட் 12 அன்று, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தின் வதந்திகள்... யூடியூபர் பெலிக்ஸ்க்கு நிபந்தனை ஜாமீன்...!
இந்த நிலையில், 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமீன் உறுதி... வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்!