×
 

இனி PRIVACY இல்லை..! பயனர்களுக்கு ஷாக் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!!

Privacy தொடர்பாக பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளது.

மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராமில் உள்ள end-to-end encryption அம்சத்தை மே 8 ஆம் தேதி முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது. இது பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த அம்சம் 2023ஆம் ஆண்டு இறுதியில் சில பகுதிகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், இன்ஸ்டாகிராமின் டைரக்ட் மெசேஜ் சாட்களில், அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், க்ரூமிங் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவதால், இந்த என்க்ரிப்ஷன் அம்சம் அவற்றைக் கண்டறிவதைத் தடுப்பதாக சிலர் விமர்சித்து வந்தனர். சட்ட அமலாக்க அமைப்புகளும், குழந்தை பாதுகாப்பு அமைப்புகளும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் காரணமாக "going dark" பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி, மெட்டாவை அழுத்தம் கொடுத்து வந்தன.

குறிப்பாக, அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் நடைபெறும் குழந்தை பாதுகாப்பு தொடர்பான வழக்கில், மெட்டாவின் உள்ளக ஆவணங்கள் வெளியாகி, என்க்ரிப்ஷன் மற்றும் பாதுகாப்பு இடையேயான முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. சில சமூக ஊடக பதிவுகளிலும், இந்த மாற்றம் CSAM-ஐக் கண்காணிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: படிப்ப மட்டும் விட்டுறாதீங்க GUYS..!! Instaவில் கலக்கும் தேவா, ஜீவா சிறுவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!!

இதனால், மெட்டா தனது தனியுரிமை உறுதிமொழியைப் பின்வாங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த மாற்றத்தால், இன்ஸ்டாகிராம் DM-களில் அனுப்பப்படும் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை மெட்டாவால் படிக்கவும், ஸ்கேன் செய்யவும் முடியும். இந்த முடிவு, தனியுரிமைக்கும் பாதுகாப்புக்கும் இடையேயான சமநிலையை மீண்டும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எம்.பி ஆனதும் சிக்கலா? வீடுகளை ஒப்படைக்காத விவகாரம்! எல்.கே.சுதீஷ் மீது வழக்குபதிய ரியல் எஸ்டேட் ஆணையம் அனுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share