×
 

மொத்தமும் போச்சு!! திமுக தலையில் இறங்கிய பேரிடி! வட மாவட்டங்களில் கடும் அதிருப்தி! உளவுத்துறை சர்வே!

வன்னியர் சமூகம் மத்தியில் அதிமுக கூட்டணியும், தலித் சமூகத்துக்கிடையே தவெகவும் வளர்ந்து வருவதால், திமுக கடுமையான பின்னடைவை சந்திக்கிறது.

திமுக அரசுக்கு வட மாவட்டங்களில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்த அதிருப்தி 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை ரகசிய அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கை ஆளுங்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உளவுத்துறை கடந்த ஒரு மாதமாக மாவட்ட வாரியாக ரகசிய சர்வே நடத்தியது. அதில் வட மாவட்டங்களில் திமுக மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருப்பது தெரிய வந்தது. தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு பகுதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, வட மாவட்டங்களை புறக்கணித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று அறிக்கை கூறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் மீது கடும் கோபம் உள்ளது. “எதுவும் செய்யவில்லை” என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அங்கு வன்னியர் சமூகத்தில் அதிமுக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தலித் சமூகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வளர்ச்சி காண்கிறது. இதனால் திமுக கடுமையான பின்னடைவை சந்திக்கிறது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீது அதிருப்தி உள்ளது. திமுகவினர் நடத்தும் கல் குவாரிகளால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் முழுமையாக அரசுக்கு எதிராக மாறியுள்ளனர்.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளூர் திமுக நிர்வாகிகளே தலைமைக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

இந்த மூன்று மாவட்டங்களில் எழுந்த அதிருப்தி திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள திமுக எம்எல்ஏக்கள் மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

கூட்டணி கட்சிகளின் வலிமை இங்கு திமுகவுக்கு உதவவில்லை. மாறாக கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் திமுகவையே பாதிக்கின்றன. 2021 தேர்தலில் ஆட்சியை பிடிக்க உதவிய வட மாவட்டங்கள் இப்போது ‘வீக்’ ஆகிவிட்டன. இந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அதிருப்தியை சரி செய்ய திமுக மேலிடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் 2026 தேர்தலில் பெரிய இழப்பு ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. வட மாவட்டங்களில் திமுகவின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. 

இதையும் படிங்க: 3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share