ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
சர்வதேச விமான முனையங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான விமான எரிபொருள் அளவு, தற்போதைய கையிருப்பு உள்ளிட்ட விபரங்களை அளிக்கும் படி ஏஏஐ வலியுறுத்தி உள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேல் மீது பல ஏவுகணை தாக்குதல்களை நடத்திய ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் ராணுவ தளங்களையும் குறிவைத்துள்ளது. குறிப்பாக துபாய் சர்வதேச விமான நிலையம் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி பெரும் சேதம் அடைந்துள்ளது. துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நகரங்களில் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பிராந்தியம் முழுவதும் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், வான்வெளி முழுவதும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவிலிருந்து கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தினசரி இயங்கும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 2ஆம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி, கேரளாவில் ஒரே நாளில் 89 சர்வதேச விமானங்கள் ரத்தாகின. இதில் 45 வருகை விமானங்கள், 44 புறப்பாடு விமானங்கள் அடங்கும். மும்பையில் ஒரே நாளில் 116 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன - 61 வருகை, 55 புறப்பாடு. மார்ச் 3ஆம் தேதியும் தொடர்ந்து தோஹா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, பஹ்ரைன் உள்ளிட்ட இடங்களுக்கான விமானங்கள் ரத்தாகின்றன. பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். பலர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் மாற்று பாதைகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு தலைவரையே கொன்னுருக்காங்க!கண்டிக்க மாட்டீங்களா? கமேனி கொலைக்கு மோடி கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
இந்நிலையில், விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான ஜெட் எரிபொருள் (ATF) அளவு, தற்போதைய கையிருப்பு, வரவிருக்கும் சப்ளை விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. சர்வதேச விமான முனையங்களில் எரிபொருள் இருப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உள்நாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த போர் பதற்றம் நீடித்தால், எண்ணெய் விலை உயர்வு, விமான கட்டண உயர்வு, பயணிகள் தவிப்பு ஆகியவை தொடரும். இந்திய அரசு தனது குடிமக்களை எச்சரித்து, தேவையில்லாத பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், போர் மேலும் விரிவடையும் அச்சம் நீடிக்கிறது.
இதையும் படிங்க: எனது சிறந்த நண்பர் மோடி!! புகழ்ந்து தள்ளும் நெதன்யாகு! இந்தியா ஆதரவு? இஸ்ரேல் பாராட்டு?