மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!
எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக ஹோட்டல்களை மூடுவதாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட ஹோட்டல் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் தொடங்கிய போர் நிலைமை, இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி தடைபட்டுள்ளது. இதன் விளைவாக, வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மார்ச் 7ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் வணிக எல்பிஜி சிலிண்டர் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை சுமார் 115 ரூபாய் உயர்ந்து, தில்லியில் 1,883 ரூபாயாகவும், சென்னையில் 2,043.50 ரூபாயாகவும் உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 193 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி விலை முறையும் மார்ச் 1 முதல் நிறுத்தப்பட்டது. இதனால், பல உணவக உரிமையாளர்கள் கையிருப்பு சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!
இந்நிலையில், பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் மார்ச் 10ஆம் தேதி முதல் நகரம் முழுவதும் உள்ள ஹோட்டல்களை மூடுவதாக அறிவித்துள்ளது. சென்னை ஹோட்டல்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம் எழுதி உடனடி நடவடிக்கை கோரியுள்ளது. மும்பையில் சுமார் 20 சதவீத உணவகங்கள் ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விநியோகம் மேம்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் 50 சதவீத ஹோட்டல்கள் மூடப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாடு சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும். விடுதிகளில் தங்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், பேச்சுலர்கள், உணவக உணவுகளை மட்டுமே சார்ந்திருப்போர் போன்ற லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உணவகங்கள் மூடப்படுவதால், ஸ்விகி, சோமாட்டோ போன்ற ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை குறையும். உணவு கிடைப்பது சிரமமாகி, விலை உயர்வு ஏற்படும்.
தற்போது கள்ளச் சந்தையில் சிலிண்டர் விலை 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சப்ளை குறைவு மற்றும் டிமாண்ட் அதிகரிப்பால், பிரியாணி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை உயரும் அபாயம் உள்ளது. 150 ரூபாய்க்கு கிடைத்த பிரியாணி 200 ரூபாயாகவும், மற்ற உணவுகளும் இதேபோல் உயரலாம். இது தொடர்ந்தால், டீ, காபி போன்ற பானங்களின் விலையும் விரைவில் உயரும்.
மத்திய அரசு வீட்டு பயன்பாட்டு எல்பிஜி விநியோகத்தை முன்னுரிமை அளித்து, மறு பதிவு இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக நீட்டித்துள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் வணிக சிலிண்டர் வழங்கப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், போர் நீடித்தால் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது. உணவுத் தொழில் மற்றும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக சர்வதேச அளவில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து இந்த நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!