என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வந்தால் வரவு வைப்போம். ஆனால் தி.மு.க.வை தோற்கடிக்க தற்போதுள்ள அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே போதுமானது என பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தகவல்
ராசிபுரத்தில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதினம் ஒருவரை பார்த்துவிட்டு சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்ததாகவும், அதற்கு ஆன்மீகம் சார்ந்து பதிவிடுவது நன்மைதான், ஆனால் தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியானால் நன்றாக இருக்கும் என்பதை அறிவுறுத்தும் விதத்தில் தான் பதிவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் சில ஊடகங்கள் அதை அதிருப்தி என பெரிதாக்குவதாகவும், பா.ஜ.க.வில் யாருக்கும், யார் மீதும் அதிருப்தி கிடையாது எனவும் கே.பி.ராமலிங்கம் விளக்கம் அளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணைய உள்ளதாக பரவும் தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய கே.பி.ராமலிங்கம் த.வெ.க. வந்தால் வரவு வைத்துக் கொள்வது வேறு விவகாரம், ஆனால் தி.மு.க.வை தோற்கடிக்க இப்போதுள்ள அ.தி.மு.க.,பா.ஜனதா, பா.ம.க., அ.ம.மு.க கூட்டணியே போதுமானது என கூறினார்.
மேலும் ஏற்கனவே பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. லட்சிய எதிரி என த.வெ.க. தலைவர் விஜய் கூறிவிட்டு ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியும் ஒரு கட்டத்திற்கு வந்து விட்டதாகவும் தெரிவித்த கே.பி.ராமலிங்கம், இன்றைக்குள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என்றார்.
இதையும் படிங்க: "பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!
அதேபோல் தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது என்பது பிரசாரமே தவிர, உண்மை அல்ல என்று கூறிய கே.பி.ராமலிங்கம் காங்கிரஸ் கட்சி நிற்கும் 28 இடங்களில் 4 இடத்தில் கூட ஜெயிக்காது என தெரிவித்தார். தேர்தல் பயத்தால் தேடித்தேடி பெரும் பொருட்செலவில் தி.மு.க. கூட்டணியை அமைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
அதோடு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசுவாசி என முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொல்வதை ஏற்றுக்கொள்வதாகவும், அ.தி.மு.க.வை அளிப்பதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் விசுவாசமாக இருந்துள்ளார் எனவும் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: வட சென்னையில் களமிறங்கும் விஜய்!! மீனவர்களை கவர திட்டம்! ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அப்டேட்!