×
 

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் காலி! நைஜிரியாவில் கதை முடிப்பு! ட்ரம்ப் அறிவிப்பு!

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நெ.,2 ஆக கருதப்படும் அபு பிலால் அல் மினுகி, அமெரிக்க படையினரால் நைஜீரியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

உலகின் மிக முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரான ஐஎஸ் (ISIS) அமைப்பின் இரண்டாவது தலைவராக கருதப்படும் அபு பிலால் அல்-மினுகி, அமெரிக்கப் படையினரால் நைஜீரியாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நைஜீரியாவின் ஆயுதப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “என் வழிகாட்டுதலின்படி, துணிச்சலான அமெரிக்கப் படையினரும் நைஜீரியப் படையினரும் இணைந்து உலகின் மிக முக்கியமான பயங்கரவாதியை ஒழித்தனர். ஆப்பிரிக்காவில் ஒளிந்துகொண்டிருந்த அபு பிலால் அல்-மினுகி, அமெரிக்க உளவுப் பிரிவினரின் கண்காணிப்பில் இருந்தான். இப்போது அவன் இல்லை” எனக் கூறினார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் கடும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நடைபெற்ற இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க: எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

அபு பிலால் அல்-மினுகியின் மரணம் ஐஎஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். “இந்த நடவடிக்கையால் ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்படும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளித்த நைஜீரிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஐஎஸ் அமைப்பு ஆப்பிரிக்காவில் குறிப்பாக நைஜீரியா, நைஜர், மாலி உள்ளிட்ட நாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்களின் முக்கிய தலைவர் ஒருவரின் மரணம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு புதிய உத்வேகம் அளிப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: “நரகக்குழி”... இந்தியாவின் கோபத்திற்கு ஆளான டிரம்ப்... மோடி பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share