இந்தியாவை குறிவைக்கும் புதிய பயங்கரவாத அலை? இஸ்ரேல் தூதர் விடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை!
இந்தியா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளை குறிவைத்து புதிய பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் தெரிவித்துள்ள இந்த கருத்து, இரு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல் பரிமாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சூழலில், புதிய வகையிலான இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகலாம் என ரூவென் அசார் எச்சரித்துள்ளார்.
“நம்மைவிட பயங்கரவாதிகள் வேகமாக செயல்படுகின்றனர். எனவே, அவர்களைவிட வேகமாக நாம் செயல்பட வேண்டும்” என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!
மேலும், கடந்த ஆண்டு ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த சில தலைவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் சென்றதாகவும், அங்கு செயல்படும் சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளின் பெயர்களும் இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலையும் இந்த பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தலின் ஒரு பகுதியாக இஸ்ரேல் தூதர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விசாரணை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ள விவகாரங்களாகும்.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் மீது புதிய தாக்குதல் முயற்சிகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதே பாதுகாப்பு அமைப்புகளின் முக்கிய சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பிளைதுபாய் விமானத்தில் கத்திக்குத்து! எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை! ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!