×
 

இஸ்ரோவின் 101வது ராக்கெட் திட்டம் அவுட்.. தோல்விக்கு என்ன காரணம்..?

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 101வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி.சி. 61 திட்டம் தோல்வி அடைந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 101வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி.சி. 61 திட்டம் தோல்வி அடைந்தது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்புக்காக 1,696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இதற்கான கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.



ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், இத்திட்டம் தோல்வி அடைந்தது. இஸ்ரோ இன்று செலுத்தியது, 101ஆவது ராக்கெட் ஆகும். விண்ணில் ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர். அதே நேரத்தில் பி.எஸ்.எல்,வி., சி-61 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்னர்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், "பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஆய்வுக்கு பின் விரிவான தகவல் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மோதலில் இந்தியா எங்களை போட்டு பொளந்திடுச்சு.. மெளனம் கலைத்த பாகிஸ்தான் பிரதமர்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share