×
 

நாளை கிளம்புகிறது பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்.. இன்று தொடங்கியது கவுண்டவுன்..!

இஸ்ரோவின் 101வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி61 நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கியது.

பாதுகாப்பு மற்றும் வானிலை கண்காணிப்பிற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 1,696.24 கிலோ எடை கொண்ட இஒஎஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனுடைய ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 

இந்நிலையில் இந்த செயற்கைகோள் பொறுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட், நாளை (மே 18) காலை 5.59 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 

இதையும் படிங்க: 63வது ஆண்டில் 63வது ராக்கெட் லாஞ்ச்.. நாசாவுடன் இணைந்து இஸ்ரோ போடும் மாஸ்டர் ப்ளான்..!

இந்தியாவின் வளர்ந்து வரும் பூமி கண்காணிப்பு பணியில் இந்த செயற்கைக்கோளும் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியுமாம். 

ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், ராக்கெட்டுக்கான இறுதி கட்டப் பணியான 22 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு காரணமாக நாளை (மே 18) பழவேற்காடு ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் 101வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்ளிட்டோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share