ஏஐ மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்... இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி பகீர் எச்சரிக்கை...!
நமது நாட்டில் பயிற்சி பெற்ற மனித ஆற்றல் அனைத்து துறைகளிலும் தேவையாக உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
செல்போனை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை போல, செயற்கை நுண்ணறிவையும் தவறாக பயன்படுத்தினால் பின் விளைவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நமது நாட்டில் பயிற்சி பெற்ற மனித ஆற்றல் அனைத்து துறைகளிலும் தேவையாக உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய போது, நமது நாட்டில் பயிற்சி பெற்ற மனித ஆற்றல் அனைத்து துறைகளிலும் தேவையாக உள்ளது எனவும், சமையலின் போது காய்கறிகளை முறையாக நறுக்காவிட்டால் நமது விரல் வெட்டுப்படும் என்பது போல, சமூக வலைதளங்களை நாம் சரியான முறையில் பயன்படுத்தாவிடில், நாம் அதற்கு இரையாக நேரிடும் என்றார்.
தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் கல்வியை கைவிடாமல் தொடர்ந்திட வேண்டும் எனவும், தெரு விளக்கில் படித்த நான், தற்போது அனைத்து புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளேன் என மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, ஆண்டுதோறும் அமெரிக்காவில் உருவாகும் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் மட்டுமே பொறியாளர்கள் உருவாகி வருகின்றனர் எனவும், ஆனால் அனைவருமே சிறந்த பொறியாளர்களாக வர வேண்டும் என்றார். தொழில் புரட்சியை தாண்டி, செயற்கை நுண்ணறிவுப் புரட்சியை நாம் சரியான பாதையில் பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிறந்த பொறியாளர் என்பதை காட்டிலும் நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்.. வாய்ப்பாக பாருங்கள்..!! இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 'நச்' அட்வைஸ்..!!
செல்போனை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை போல, செயற்கை நுண்ணறிவையும் தவறாக பயன்படுத்தினால் பின் விளைவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார். பழவேற்காடு கடற்கரை பகுதியில் கடல் ஆமைகள் அறிவியல் வளர்ச்சியால் உயிரிழந்ததா என்று கேள்விக்கு, அனைவரும் பொறுப்புள்ளவர்களாக மாறிட வேண்டும் என பதில் அளித்தார். உலக நாடுகள் அனைத்துமே சேர்ந்தும் செய்ய முடியாத நிலையில் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தது இந்தியர்கள் தான் எனவும், செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக முதன் முதலில் சென்றதும் இந்தியர்களே என கூறினார்.
ஒரு சிலர் பொறுப்பாக நடந்து கொள்ளாததே செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ஏற்பட்ட தவறுகளுக்கு காரணம் எனவும் கூறினார். அடுத்த 6 மணி நேரத்தில் எங்கெங்கு மழை வரும் என்பதை துல்லியமாக கணிப்பது போல், 6 மாதங்கள் என நீண்ட கால முன்னறிவிப்புகளை வெளியிட மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது எனவும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் AI..!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!! ஷாக்கான ஊழியர்கள்..!!