×
 

ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்க சொன்னதே அமெரிக்காதான்!! இப்போ மாத்தி பேசுறாங்க!! ஜெய்சங்கர் சுளீர்!!

சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும்படி அமெரிக்கா கூறியது. ஆனால், தன் நிலைப் பாட்டை தற்போது மாற்றிக் கொண்டுள்ளது என ரஷ்யாவில் நடந்த கூட்டத்தில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இந்தியா-ரஷ்யா-அமெரிக்கா முக்கோண விவகாரமும் பரபரப்பை கிளப்புது! நம்ம வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவுக்கு போய் அங்கே செர்ஜி லாவ்ரோவையும், அதிபர் புடினையும் சந்திச்சு, ரஷ்யாவோட எண்ணெய் வாங்குற விவகாரத்துல அமெரிக்காவுக்கு சுளீர்னு ஒரு பதிலடி கொடுத்திருக்காரு. “ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்க சொன்னது அமெரிக்காதான், இப்போ மாத்தி பேசுறாங்க!”னு ஜெய்சங்கர் சொல்லி, அமெரிக்காவோட இரட்டை வேடத்தை அப்பட்டமா காட்டியிருக்காரு.

ஆகஸ்ட் 19-ம் தேதி, ரஷ்யாவோட முதல் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் அழைப்பின் பேரு, ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணமா போனாரு. அங்கே, இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாசார ஒத்துழைப்பு பத்தின 26-வது கூட்டத்துல கலந்துக்கிட்டாரு. இந்த கூட்டத்துல, “நம்ம ரெண்டு நாடுகளும் சர்வதேச அரசியல் சவால்களை எதிர்கொள்ள புது வழிகளை கண்டுபிடிக்கணும். 

எப்படியும் நம்ம உறவை இன்னும் வலுப்படுத்தணும்”னு ஜெய்சங்கர் பேசினாரு. இதுக்கு அப்புறம், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திச்சு, “இந்தியா-ரஷ்யா உறவு நம்பிக்கைக்கு பாத்திரமானது, சிறப்பு வாய்ஞ்சது”னு பேச்சு நடந்திருக்கு. கடைசியா, அதிபர் புடினையும் சந்திச்சு, உக்ரைன்-ரஷ்யா போர், அமெரிக்காவோட டிரம்ப்-புடின் சந்திப்பு, வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு பத்தி எல்லாம் விவாதிச்சிருக்காரு.

இதையும் படிங்க: அமெரிக்காவின் தொல்லையை சமாளிப்பது எப்படி? ரஷ்ய அரசியல், பொருளாதார நிபுணர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை!!

இப்போ முக்கியமான விஷயம்! ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்திச்சு, ரஷ்ய எண்ணெய் வாங்குற விவகாரத்துல அமெரிக்காவுக்கு செம்ம பதிலடி கொடுத்திருக்காரு. “ரஷ்யாவோட எரிசக்தி ஒத்துழைப்பு நமக்கு ரொம்ப முக்கியம். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தியா-ரஷ்யா உறவு சீரா வளர்ந்து வருது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குறது நம்ம நாட்டு நலனுக்காக மட்டுமில்ல; உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தவும் இது உதவுது. 

இதை சில வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்காதான் சொன்னது. ஆனா, இப்போ அவங்க தங்கள் நிலைப்பாட்டை மாத்தி, குழப்பத்தை உருவாக்குறாங்க”னு காட்டமா சொல்லியிருக்காரு. இதுல முக்கியமான பாயிண்ட், “ரஷ்யாகிட்ட அதிக எண்ணெய் வாங்குறது நாங்க இல்ல; சீனாதான். இயற்கை எரிவாயுவை அதிகம் வாங்குறது ஐரோப்பிய யூனியன்”னு ஜெய்சங்கர் அமெரிக்காவோட இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டியிருக்காரு.

2022-ல உக்ரைன் போர் ஆரம்பிச்ச பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெயை புறக்கணிச்சதால, இந்தியா அந்த இடத்தை பயன்படுத்தி, தள்ளுபடி விலையில ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க ஆரம்பிச்சது. இது உலக எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உதவியது, இதுக்கு அமெரிக்காவே ஆதரவு கொடுத்துச்சு.

ஆனா, இப்போ டிரம்ப் ஆட்சி, இந்தியா மீது 50% வரி விதிச்சு, “ரஷ்ய எண்ணெய் வாங்குறதை நிறுத்து”னு அழுத்தம் கொடுக்குது. இதை ஜெய்சங்கர் கேள்வி கேட்டு, “நாங்க தப்பு பண்ணல; உலக சந்தையை நிலைப்படுத்தத்தான் இப்படி பண்ணோம்”னு தெளிவா சொல்லியிருக்காரு.

இந்தியாவோட நிலைப்பாடு, “எங்களுக்கு எரிசக்தி பாதுகாப்பு முக்கியம். சந்தையில எங்கே குறைந்த விலையில எண்ணெய் கிடைக்குதோ, அங்கே வாங்குவோம்”னு இருக்கு. ரஷ்யாவோட வர்த்தக உறவு, எண்ணெய் மட்டுமில்லாம பாதுகாப்பு, முதலீடு, அறிவியல் துறைகளிலும் வலுவா இருக்கு.

ஜெய்சங்கரோட இந்த பயணம், இந்தியாவோட தனித்தன்மையான அரசியல் நிலைப்பாட்டையும், ரஷ்யாவோட நீண்டகால உறவையும் உறுதிப்படுத்தி இருக்கு. அமெரிக்காவோட அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாதுன்னு ஜெய்சங்கர் தெளிவா காட்டியிருக்காரு.

இதையும் படிங்க: 2 நாள் பயணம்.. ரஷ்யா செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. காரணம் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share