அப்போ பிரதமர் மாற்றமா? ஜெகதீப் தன்கர் விவகாரத்தில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்..!
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ள விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல சந்தேகத்தை எழுப்பி உள்ளன.
இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இந்த ராஜினாமா மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் அறிவிக்கப்பட்டதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை உடல்நலப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டாலும், மருத்துவ அறிக்கை இல்லாததால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இதனிடையே தன்கர் உடல் நிலையை காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். ஜெகதீப் தன்கருக்கு அடுத்த மே மாதம் 75 வயது ஆகுவதை குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர், செப்டம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு 75 வயது சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியினர் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். நேற்று மதியம் 1 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் இடையில் என்ன நடந்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்கர் தலைமையிலான BAC கூட்டத்தில் ஒரு மணி வரை நட்டா கலந்து கொண்டதாகவும், மீண்டும் 4.30 மணிக்கு நடந்த BAC கூட்டத்தில் அவர் பங்கேற்காதது ஏன் என்றும் கீழே எழுதியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் ஏதோ ஒன்று நடக்க இருப்பதாக சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டி சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு...! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்...!
இன்று மாநிலங்களவை நிகழ்வுகளில் ஜெகதீப் தன்கர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் நாளைக்கு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர். மேலும் ஜே.பி நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: என்னை பேசவே விடல.. இது என்ன பாரபட்சம்! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!