அரசு பங்களா கொடுத்தாச்சு!! அப்புறமும் மவுனம் ஏன்? சர்ச்சையாகும் ஜெகதீப் தன்கர் விவகாரம்!!
துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அவர் மவுனம் காத்து வருகிறார்.
ஜகதீப் தன்கர் விவகாரம் இப்போ இந்திய அரசியல் களத்துல பெரிய பரபரப்பை கிளப்பி வச்சிருக்கு! முன்னாள் துணை ஜனாதிபதியான இவர், கடந்த ஜூலை 21-ம் தேதி திடீர்னு தன்னோட பதவியை ராஜினாமா பண்ணினது மட்டுமில்லாம, இப்போ அரசு கொடுத்த பங்களாவைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசாம மவுனம் காப்பது பல கேள்விகளை எழுப்புது. என்னதான் நடக்குது இந்த விவகாரத்துல?
2022-ல இருந்து இந்தியாவோட துணை ஜனாதிபதியா இருந்தவர் ஜகதீப் தன்கர், வயசு 74. இவர் ராஜ்யசபாவோட தலைவராகவும் இருந்தாரு. மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஆரம்பிச்ச முதல் நாளே, அதாவது ஜூலை 21-ம் தேதி, இவர் தன்னோட பதவியை ராஜினாமா பண்ணிட்டாரு. ராஜினாமா கடிதத்துல, “என்னோட உடல்நிலை காரணமா இந்த முடிவு எடுத்தேன், மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ் படி இதை பண்ணேன்”னு எழுதியிருந்தாரு. ஆனா, இந்த “உடல்நிலை” காரணத்தை எதிர்க்கட்சிகள் நம்பல. “இதுக்கு பின்னாடி வேற ஏதோ பெரிய காரணம் இருக்கு”னு குற்றம் சாட்டினாங்க. குறிப்பா, மத்திய அரசு கூட இவருக்கு இடையில ஏதோ மோதல் இருந்ததா சொல்றாங்க.
இந்த ராஜினாமா விவகாரத்துல முக்கியமான பாயிண்ட் என்னன்னா, ஜகதீப் தன்கர் அன்னிக்கு ராஜ்யசபாவுல ஒரு முக்கிய முடிவு எடுத்தாரு. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 63 பேர், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யணும்னு ஒரு மோஷனை கொடுத்திருந்தாங்க. இவரோட வீட்டுல கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான புகார் காரணமா இந்த மோஷன் வந்தது. இதை ஜகதீப் தன்கர் உடனே ஏத்துக்கிட்டு, “நான் இதை விசாரிக்க ஆரம்பிக்கிறேன்”னு சொன்னாரு.
இதையும் படிங்க: ஜெகதீப் ராஜினாமாவுக்கு பின்னால் மறைந்திருக்கும் கதை! ராகுல்காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டு!!
ஆனா, இது மத்திய அரசுக்கு புடிக்கல. அவங்க இந்த மோஷனை லோக்சபாவுல கொண்டு வரணும்னு திட்டமிட்டிருந்தாங்க. இதனால, தன்கரோட இந்த “வேகமான” முடிவு அரசுக்கு எரிச்சலை கொடுத்திருக்கு. இதையடுத்து, அன்னிக்கு மாலை நடந்த பிசினஸ் அட்வைஸரி கமிட்டி மீட்டிங்குக்கு மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் வரல. இது தன்கருக்கு அவமரியாதையா தெரிஞ்சிருக்கு. இதுதான் ராஜினாமாவுக்கு “கடைசி தூண்டுதல்” ஆக இருந்திருக்கலாம்னு எதிர்க்கட்சிகள் சொல்றாங்க.
இப்போ அரசு, ஜகதீப் தன்கருக்கு டில்லியில லுட்யென்ஸ் ஏரியாவுல, அப்துல் கலாம் சாலையில ஒரு டைப்-8 பங்களாவை ஒதுக்கியிருக்கு. இது முன்னாள் ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு கொடுக்கப்படுற வசதி. இதைத் தவிர, அவருக்கு மாதம் 2 லட்சம் பென்ஷன், இலவச விமான-ரயில் பயணம், இலவச மருத்துவ வசதி, இரண்டு பர்சனல் அசிஸ்டெண்ட்ஸ், அவரோட மனைவிக்கு ஒரு பர்சனல் செக்ரட்டரி, இப்படி பல சலுகைகள் இருக்கு. ஆனா, இந்த பங்களாவை ஏத்துக்கவா, இல்லையா, இல்ல சொந்த ஊருல 2 ஏக்கர் நிலம் வாங்கிக்கவானு இதுவரைக்கும் தன்கர் ஒரு முடிவு சொல்லல. இது இன்னும் சர்ச்சையை கிளப்புது.
எதிர்க்கட்சிகள், குறிப்பா காங்கிரஸ், “இவரு ராஜினாமா பண்ணினது உடல்நிலை காரணமா இல்லை, அரசு கொடுத்த அழுத்தம் காரணமா?”னு கேள்வி எழுப்புது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், “இவரு விவசாயிகளுக்காகவும், நீதித்துறை பொறுப்புக்காகவும் பேசினது அரசுக்கு புடிக்கல.
அதான் இவரை வெளியேற்றியிருக்காங்க”னு சொல்றாரு. இன்னொரு பக்கம், சிலர் “தன்கர் எங்கே போனாரு? இவர் இப்போ எங்க இருக்காரு?”னு கேள்வி கேக்குறாங்க. இதுக்கு மேல இந்த மவுனம் தொடர்ந்தா, இந்த விவகாரம் இன்னும் பெரிய சர்ச்சையாகும்னு தெரியுது.
இதையும் படிங்க: யார் இந்த சுதர்சன் ரெட்டி!! I.N.D.I.A கூட்டணி வேட்பாளரின் கம்ப்ளீட் BIO-DATA!!