100 நாள் வேலை திட்டம்... 27 லட்சம் பேர் நீக்கம்? ஜெய்ராம் ரமேஷ் பகீர் குற்றச்சாட்டு..!
100 நாள் வேலை திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும். கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது. குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, சாலை அகலப்படுத்துதல் என பல்வேறு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தங்கள் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 25 கோடியே 25 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 14 கோடியே 35 லட்சம் பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.336 ஆக அதிகரித்தது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை விட 17 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 2026லும் திமுகவுடன் தான் கூட்டணி.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உறுதி..!
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் இருந்து ஒரே மாதத்தில் 27 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இது ஏழைகளின் சட்டப்பூர்வமான வேலை உரிமையைப் பறிக்கும் திட்டமிட்ட முயற்சி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: SILENT- ஆ செய்வாங்க! பீகார் முடிவு அனைவருக்குமான எச்சரிக்கை... கேரளா காங்கிரஸ் கருத்து...!