அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்!! அமெரிக்காவை கதறவிட்ட ஜெய்சங்கர்!! கறார் பதில்!
அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற ரீதியில் வெளியுறவு கொள்கையை அந்நாடு அணுகினால், இந்தியாவும் அதே போல, 'இந்தியாவுக்கே முன்னுரிமை' என்ற வெளியுறவு கொள்கையில் இயங்கும்.
டெல்லி: அமெரிக்கா தனது ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ கொள்கையைப் பின்பற்றினால், இந்தியாவும் ‘இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ டெல்லி வந்துள்ளார். நேற்று ஹைதராபாத் இல்லத்தில் ஜெய்சங்கரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் விசா பிரச்னைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர், “இந்தியா-அமெரிக்க உறவில் மக்கள் நட்புறவே மையமாக உள்ளது. எனவே இந்தியர்கள் அமெரிக்கா செல்லும் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். விசா வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிக்கல்களை நாங்கள் அமெரிக்க தரப்பிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!
மேலும், “அமெரிக்கா ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்று செயல்பட்டால், இந்தியாவும் ‘இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்படும். இரு நாடுகளும் பரஸ்பர தேசிய நலனில் அக்கறை கொள்ள வேண்டும்” என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.
கடந்த காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்ததோடு, இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததும், H1B விசா கட்டண உயர்வு, கிரீன் கார்டு நடைமுறைகளில் கெடுபிடி உள்ளிட்ட நடவடிக்கைகளும் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்தில் டிரம்ப் தலையீட்டு கருத்து கூறியதும் பதற்றத்தை அதிகரித்தது.
இந்தியா சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், அதேவேளையில் தகுதியான இந்திய இளைஞர்கள் பாதிக்கப்படாத வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு இந்தியா-அமெரிக்க உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாட் மாநாட்டில் இரு நாட்டு உறவு மேலும் வலுப்பெறும் என்கிற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி வந்தார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ! பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை!