×
 

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி... ஜம்மு-காஷ்மீர் மருத்துவ கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு...!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் உடைய லாக்கர்களை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அதற்கு கீழ் இயங்கும் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருமே தங்களுடைய லாக்கர்களை அடையாளம் காணுவதற்கான ஒரு உத்தரவை தற்பொழுது அந்த மருத்துவமனை நிர்வாகமானது அதிகாரப்பூர்வமாக உத்தரவாக வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக 14ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்கள், ஊழியர்கள் என அனைவருமே தங்களுடைய லாக்கர்களில் அவரவர் பெயர்களை எழுதி வைக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு எனவும், அதன் பிறகு அந்த லாக்கர்களில் ஆய்வு செய்யப்படும் என்ற ஒரு உத்தரவையும் தற்போது அதிகாரிகள் சுற்றறிக்கையாக பிறப்பித்துள்ளனர். 

இதையும் படிங்க: தணியாத பதற்றம்... பாகிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு..! பரபரப்பு...!

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருந்த காரணத்தால் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த லாக்கர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றாலும் எந்த மருத்துவர்கள் அல்லது மாணவர்களோ அடையாளம் காண மறுப்பு தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை என்பது கடுமையாக எடுக்கப்படும் என்ற உத்தரவும் அந்த ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

அடுத்தடுத்து மருத்துவர்கள் கைது:

டெல்லியில் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தில் பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 360 கிலோ வெடி பொருட்களுடன் 3 ஆண் மருத்துவர்கள் கைதான நிலையில் அவருடன் பணியாற்றிய பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பரிதாபாத்தில் பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மீது பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவரான அதீல் அகமது ராதரும் ஒருவர். ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை புகழ்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதை சிசிடிவி காட்சிகள் காட்டிய பின்னர், நவம்பர் 6 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து அதீல் ராதர் கைது செய்யப்பட்டார்.

இந்த வார தொடக்கத்தில், போலீஸார் அனந்த்நாக்கில் சோதனை நடத்தி, அதீலின் லாக்கரில் இருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர். அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை அதீலுடன் சேர்ந்து மற்றொரு மருத்துவரான முஜம்மில் ஷகீல் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது, அவர் நவம்பர் 10 அன்று கைது செய்யப்பட்டார்.

மருத்துவர் ஷகீலைப் போலவே பெண் மருத்துவரான டாக்டர் ஷாஹீன் ஷாஹித் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன. அதேபோல ரிசின் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கூறி குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவால் மருத்துவர் அகமது மொகியுதீன் சயீத் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: SIR பணிகளை உன்னிப்பா கவனிக்கணும்... எதுவும் மிஸ் ஆகக்கூடாது... கழக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share