×
 

நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் தலையிட மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வே விசாரித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரைப்படத் தணிக்கைத் துறையின் கெடுபிடிகளால் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போய் வரும் சூழலில், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் (KVN Productions) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திரையரங்கு வெளியீட்டிற்குத் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தயாரிப்புத் தரப்பு முன்வைத்த போதிலும், உச்சநீதிமன்றம் இதில் நேரடித் தீர்ப்பு வழங்க முன்வரவில்லை.

இதையும் படிங்க: ஜனநாயகன் படத்துக்கு ஏன் இவ்வளவு தடை? விஜய்க்காக சென்சார் போர்டை சாடிய மன்சூர்!

இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் அமர்வு, "இந்தத் தணிக்கை விவகாரத்திற்குள் நாங்கள் தற்போது நேரடியாகச் செல்ல விரும்பவில்லை; நீங்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு முன்பே சென்று முறையிட வேண்டும்" எனத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. மேலும், வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் எனக் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. அரசியல் பின்னணி கொண்ட கதைக்களம் என்பதால் தணிக்கையில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வரும் 20-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பே இந்தப் படத்தின் திரையரங்கு வருகையை உறுதி செய்யும். இதனால் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ராகுல் பேசுவது வருத்தமளிக்கிறது! விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பதிலடி!


 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share