இந்தியா வரும் ரூ.1 லட்சம் கோடி முதலீடு! சப்தமில்லாமல் சாதித்து காட்டிய மோடி! ஜப்பான் அளித்த உறுதி!
உற்பத்தி, செமி கண்டக்டர், ஏஐ, பசுமை ஆற்றல், மற்றும் நிதி ஆகிய துறைகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளது.
டெல்லி: ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஜப்பான் இந்தியாவில் உற்பத்தி, செமிகண்டக்டர், ஏஐ, பசுமை ஆற்றல் மற்றும் நிதித் துறைகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இந்த முடிவு இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆகஸ்ட் முதல் இதுவரை இரு நாடுகளுக்கு இடையே 120 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது வெறும் வர்த்தக உறவைத் தாண்டி, தொழில்நுட்ப கூட்டாண்மையாக வளர்ந்து வருவதை காட்டுகிறது.
இதையும் படிங்க: உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!
ஜப்பானின் முதலீடுகள் குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலங்கானா, அசாம், மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவலாக அமைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறையில் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. டொயோட்டா நிறுவனம் மகாராஷ்டிராவின் புனே அருகே பிட்கின் நகரில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது.
இதன் மூலம் சுமார் 2,800 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும். சுசூகி நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்குவதுடன், நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கும் கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளது.
டய்கின் நிறுவனம் ஹரியானாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவுகிறது. ஜேஎப்இ ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீலுடன் இணைந்து 160 பில்லியன் ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த ஸ்டீல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
செமிகண்டக்டர் துறையில் மிகப் பெரிய முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. ஐஐடி கவுகாத்தி, புஜிபிலிம் மற்றும் டோகோ கோகி நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளன. இந்த முதலீடு இந்தியாவை உலகின் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையமாக மாற்றும் வாய்ப்பை உருவாக்கும்.
நிதித் துறையிலும் ஜப்பானிய வங்கிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. MUFG 400 பில்லியன் ரூபாயும், SMBC 170 பில்லியன் ரூபாயும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன. இது இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் தேவைகளுக்கு நிதி உதவி அளிக்கும்.
இந்த ஒப்பந்தங்கள் இந்திய-ஜப்பான் உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!