எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!
எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சபாநாயகர் பிரபாகர் விளக்கம் கொடுத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து விமர்சித்து பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அதிகாலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சபாநாயகர் பிரபாகர் என்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவரிடம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கயிறு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், திமுக MLA மார்க்கண்டேயன் கைது விவகாரத்தில் பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்யவேண்டும் என்ற விதி இல்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பேரவையின் எல்லைக்குள் அதாவது சட்டப்பேரவை கட்டடம், அமைச்சர் அறை, அரசு அறை, நூலகம் போன்ற இடங்களில் MLA-வை கைது செய்யத்தான் சபாநாயகரின் அனுமதி தேவை என்றும் கூறினார். பேரவை அமைப்பு எல்லைகளை தி தவிர பிற இடங்களில் MLA-வை கைது செய்ய பேரவை தலைவர் அனுமதி தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!