×
 

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு கடிதங்கள் அனுப்பி இருப்பதாக சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அதிமுகவில் கடும் பிளவுகள் ஏற்பட்டன. 47 எம்எல்ஏக்களில் 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

பிறகு எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிமுக பிளவுகள் சரி செய்யப்பட்ட நிலையில் சபாநாயகர் இடம் வழங்கப்பட்ட கடிதங்கள் மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பான வலியுறுத்தல்கள் பின்வாங்கப்பட்டன. இந்த நிலையில் அதிமுகவினர் 21 பேர் பதவி தப்பி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நான்கு கடிதங்களை அனுப்பி இருப்பதாக சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் தெரிவித்தார்.

21 பேரை மன்னிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அளித்து இருப்பதாக கூறியுள்ளார். 21 எம்எல்ஏக்களுக்கு எந்த தகுதி இழப்பும் ஏற்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளார். நான்கு கடிதத்தையும் முறையாக பரிசீலித்து ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் பேரவை விதியை மனதில் ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும் சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 135 2026 அளித்த கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.. நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் இருப்பதாக கூறியுள்ளார். 25 உறுப்பினர்களில் 21 பேருக்கு மன்னிப்பு கடிதம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் மீதமுள்ள நான்கு பேர் மீது நடவடிக்கை தொடங்குவதாகவும் கூறியுள்ளார் 4 பேர் மீது என்ன நடவடிக்கை என்பதை விரைவில் விளக்கமாக அறிவிப்பேன் என்றும் கூறி இருக்கிறார். சிவி சண்முகம் மற்றும் சி விஜயபாஸ்கரின் மன்னிப்பையும் ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: #BREAKING: சபாநாயகர் ஆகிறார் ஜேசிடி பிரபாகர்..! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share