பிஞ்சு குழந்தைகளுக்கு கேன்சரை ஏற்படுத்தும் அபாயம்! சிக்கியது 'ஜான்சன் அண்டு ஜான்சன்'!
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான, 'ஜான்சன் அண்டு ஜான்சன்' தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தும், 'ஆஸ்பெஸ்டாஸ்' துகள்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அந்நிறுவனம் பிரிட்டனில் வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான, 'ஜான்சன் அண்டு ஜான்சன்' தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தும், 'ஆஸ்பெஸ்டாஸ்' துகள்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அந்நிறுவனம் பிரிட்டனில் வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி நுகர்வோர் பொருள் நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் (J&J) தயாரிக்கும் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தெரிந்தே மறைத்து விற்றதாகக் கூறி, பிரிட்டனின் உயர் நீதிமன்றத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் கூட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இது பிரிட்டன் வரலாற்றில் மிகப்பெரிய தயாரிப்பு பொறுப்பு வழக்காக மாறலாம். நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.
இதையும் படிங்க: பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து!! வரிந்து கட்டி களமிறங்கிய காங்.,! தலைசுற்றும் பின்னணி!
டால்கம் பவுடர், இயற்கை கனிமமான டால்க் தொகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆஸ்பெஸ்டாஸ் தொகுதிகளுக்கு அருகில் இருப்பதால், தோண்டும் போது துகள்கள் கலக்க வாய்ப்பு உண்டு.
போதிய சுத்திகரிப்பின்றி பயன்படுத்தினால், இவை சுவாசம், தோல் மூலம் உடலுக்குள் சென்று கருப்பை புற்றுநோய், மெசோதீலியோமா போன்றவற்றை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது . 'ஜான்சன் அண்டு ஜான்சன்' (J&J) தனது பவுடரை "தூய்மையானது, பாதுகாப்பானது" என விளம்பரப்படுத்தியது.
1960களில் இருந்து J&J உள் ஆவணங்கள், அறிக்கைகள் ஆஸ்பெஸ்டாஸ் தொடர்பை உணர்த்தியுள்ளன. 1973ல் "தால்க் துகள்கள் ஆஸ்பெஸ்டாஸ் போன்றவை" என உள் மெமோ இருந்தும், நிறுவனம் எச்சரிக்கை இல்லாமல் விற்றது.
FDA போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை அழுத்தி, சோதனை தரங்களை குறைத்தது. பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்கள் பலர் புற்றுநோயால் இறந்தனர். பிரிட்டனில் 3,000+ பேர் (பெரும்பாலும் பெண்கள்) வழக்கில் சேர்ந்துள்ளனர். அமெரிக்காவில் 67,000+ வழக்குகள்; $13 பில்லியன் ($966 மில்லியன் சமீப வழக்கு) இழப்பீடு கோரப்பட்டது.
J&J மற்றும் அதன் பிரிவு Kenvue, "பவுடர் ஒழுங்குமுறை தரங்களை பூர்த்தி செய்தது, ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என மறுத்துள்ளது. மேலும் புற்றுநோய் ஏற்படுத்தாது" என மறுக்கிறது. உலகளாவிய சோதனைகள் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்கிறது. 2020ல் அமெரிக்கா-கனடாவில், 2023ல் பிரிட்டனில் டால்க் பவுடரை நிறுத்தி, சோளமாவு அடிப்படைக்கு மாறியது.
வழக்கறிஞர்கள், பல நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கோருகின்றனர். இது உலகளாவிய வழக்குகளை அதிகரிக்கலாம். பாதிக்கப்பட்ட பெண் ஜானெட் புச்சில்லோவின் கணவர் மெசோதீலியோமாவால் இறந்தார்; அவர் "ஆரோக்கியமான மனிதர்" என்கிறார். இந்த வழக்கு, நிறுவனங்களின் பொறுப்பின்மைக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கிட்னி முறைகேடு... அது திமுக MLA ஹாஸ்பிட்டல்.. அதான் கண்டுக்கல... இபிஎஸ் விளாசல்...!