×
 

சும்மாவே அவமதிப்பு வழக்கு போடுவாரா? நீதிபதிக்கு எதிராக போராட்டத்தில் குறித்து வழக்கறிஞர்கள்..!

உயர் நீதிமன்ற நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கங்களை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது அவமதிப்பு குற்றம் சுமத்தி அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர்  மீது பதினாறு பக்கங்களை கொண்ட புகார் ஒன்றை அனுப்பியதாகவும் இதனால் ஆத்திரப்பட்டு அவர் மீது அவமதிப்பு குற்றம் சுமத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சாதி மதம் பார்த்து தீர்ப்பு வழங்குகிறார் என்றும் சராசரி நபர்களை சாதி மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நிலையெடுத்து பேசுகிறார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டதற்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பழிவாங்கலை மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது அவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல்.. கூட்டு களவானிகளா இருக்காதீங்க.. அதிகாரிகளுக்கு வார்னிங்!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். சாதி மதம் பார்த்து நீதிபதிகள் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அரசியல் சட்டத்திற்கு பெருத்த அவமானம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி திண்டுக்கல், மதுரை, ராசிபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், உயர்நீதிமன்றம், பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதையும் படிங்க: போரில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்.. துருக்கி தப்பிய மனைவி மறுமணம்.. திடீர் ட்விஸ்ட்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share