காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அமைதி மற்றும் கருணையைா போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது ஒரு கோழைத்தனமான, மன்னிக்க முடியாத வன்முறை என வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதற்கும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததற்கும் இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
காபூலில் உள்ள ஓமித் போதைப்பொருள் மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையத்தின் மீது நேற்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுவீசின. சுமார் 2,000 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையின் பெரும்பகுதி தரைமட்டமானது.
இந்தத் தாக்குதலில் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. பலியாகிவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெடித்தது போர் !! மாறி மாறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்..!! நிலவும் பதற்றம்..!!
இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், புனிதமான ரம்ஜான் மாதத்தில், அமைதியையும் கருணையையும் போற்றும் நேரத்தில் ஒரு மருத்துவமனையை இலக்கு வைத்து இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியிருப்பது மனிதாபிமானமற்ற செயல். ஒரு படுகொலையை ராணுவ நடவடிக்கை என்று பாகிஸ்தான் மூடிமறைக்க முயல்கிறது எனச் சாடியுள்ளது.
இருப்பினும், தான் பொதுமக்களையோ அல்லது மருத்துவமனையையோ இலக்கு வைக்கவில்லை என்றும், பயங்கரவாதிகளின் தளம் மீது மட்டுமே துல்லியமான தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை வழக்கம் போல மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் 'நேரடிப் போர்' (Open War) போன்ற சூழல் நிலவி வருகிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரம்ஜான் நோன்பு காலத்தில் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானில் நடக்கும் அக்கிரமம்..!! மனைவியை கணவர்கள் அடிப்பது தப்பு இல்லையாம்..!! வந்தாச்சு புதிய சட்டம்..!!