×
 

பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

ஒரகடம் அருகே பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டி அரசு நிலங்களை ஏமாற்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்த அதிமுக பிரமுகர் கைது

ஒரகடம் அருகே பனப்பாக்கம் பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பெண்களை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டை உடைத்து அராஜத்தில் ஈடுபட்டதாக அதிமுக பிரமுகர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அதிமுகவின் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ரவி. இவர்  அந்த பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார்.

இவர் கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துபொது மக்களுக்கு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இதையும் படிங்க: ஓடும் ரயில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நினைவிருக்கா?... சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்...!

இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக பிரித்து தன் தம்பி இறந்து போன மூர்த்தி பெயரில் நகரை உருவாக்கி வீட்டுமனை ஒவ்வொன்றையும்
4,50,000 என பிரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 

அந்த மூர்த்தி நகரில் வீடு கட்டி தன்னுடைய கணவருடன் வீட்டில் வசிக்கும் நந்தினி என்ற பெண்ணை ஆபாசமாக பேசி ,அவரது கணவரையும், உறவினர்களையும் மிரட்டி  வீட்டை காலி செய்ய சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  

அந்த வீடியோவில் என்னை எவரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் இங்கிருக்கும் அனைத்து பெண்களும் தான் தொட்டவர்கள் தான் என ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் நந்தினியை தன்னுடைய பாலியல் ஆசைக்கு இணங்க அழைத்து அவர் மறுத்ததால் தான் அவர் வீட்டை உடைத்து, குடியிருக்க இயலாமல் குடிநீர் இணைப்பை நிறுத்தி மின்சார மீட்டரை எடுத்துச் சென்று விட்டதாகவும், அக்கம் பக்கத்தில் உள்ள வேறு யாரும்  நந்தினிக்கு குடிநீர் வழங்கக் கூடாது என்று மிரட்டுவதாகவும், அடியாட்களுடன் வந்து  கொலை மிரட்டல் விடுத்து  அதிமுக பிரமுகர் ரவி அராஜத்தில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் நந்தினி கடந்த 1 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் பல்வேறு காரணங்களை தெரிவித்து ரவி ஒரகடம் காவல் நிலையத்திற்கு வராததால் ஒரகடம் காவல்துறையினர் அவர் வீட்டிற்கு சென்று கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து தற்போது விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட  நந்தினி ஒரகடம் காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜாமீன் வேண்டி அதிமுக பிரமுகர் பனப்பாக்கம் ரவி நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிபதி முன் ஜாமின் வழங்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை.. 21 பள்ளி மாணவிகளை சீரழித்த அறிவியல் ஆசிரியர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share