முழு சங்பரிவார் சேவகராக மாறிய EPS... அவ்ளோ விசுவாசம்..! பந்தாடிய கனிமொழி..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முழு சங்பரிவார் சேவகராக மாறிவிட்டார் என கனிமொழி விமர்சித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பதிவிட்ட ஒரு வாழ்த்துப் பதிவு சமீபத்தில் கவனம் ஈர்த்தது. அந்த நாளில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தாய்மொழி நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் அவர் ஒரு புகைப்படத்தை பதிவேற்றினார். அந்தப் படத்தில் திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்த நிலையில் காட்டப்பட்டிருந்தது.
இது வெளியான சில நிமிடங்களுக்குள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது. திருவள்ளுவரைப் பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உருவம் வெள்ளை வஸ்திரம் அணிந்த, எளிமையான தோற்றத்தில் இருப்பது வழக்கம். அதனால், காவி நிறம் போன்றது சிலருக்கு "சனாதன மத அடையாளத்தை" திணிப்பது போலத் தோன்றியது.
இதனால், "திருவள்ளுவரை காவிமயமாக்க முயற்சி" என்ற விமர்சனங்கள் எழுந்தன. திருவள்ளுவருக்கு காவி நிற அணிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டது பாஜகவுடன் அதிமுக வைத்துள்ள கூட்டணியை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதாக அடிக்கடி பாஜக மீதுதான் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்.
இதையும் படிங்க: தேமுதிகவை இழுத்து வந்தது யார்? திமுகவில் கோஷ்டி பூசல்?! கனிமொழி Vs சபரீசன் தரப்பு வாக்குவாதம்!
அப்படி இருக்கும்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிநிற திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவேற்றியது பாஜகவின் கொள்கைகளை அவர் பின்பற்றுவதாகவும் அதனை பிரதிபலிப்பதாகவும் அமைகிறது என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமியை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஆயிரம் விளக்கில் களம் இறங்கும் மு.க.ஸ்டாலின்?! கொளத்தூர் இல்லையா? உதயநிதி, கனிமொழி களம் காண்பது எங்கே?