×
 

எங்கள அசைக்க முடியாது... நாங்க எல்லாரும் ஒன்னுதான்! மத்திய அரசுடன் கைகோர்த்த கனிமொழி!

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதிபலிப்பதில் பெருமை கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான நிலைப்பாடு என்ன என்பதை உலக நாடுகளுக்கு வெளி காட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. பாஜக உறுப்பினர்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சி எம்.பி.களையும் சேர்த்து இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. கனிமொழி, சசிதரூர், சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏழு பேர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவைப் பிரதிபலிப்பதில் பெருமை கொள்வதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்த முக்கியமான நேரத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தூதுக்குழுக்களில் ஒன்றை வழிநடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை அதிமுக காப்பாற்றியது..! கனிமொழி எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு..!

தேசத்தின் ஒருமைப்பாட்டிற்காகவும், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்காகவும் திமுக எப்போதும் பாடுபட்டுள்ளது என்றும் உறுதியான ஆதரவிற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இந்தப் பொறுப்பை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜுவிற்கும், ரந்தீர் ஜெய்ஸ்வாலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தேசத்தின் நலனைப் பொறுத்தவரை, நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பரப்புரை.. ரஷ்யா குழுவுக்கு கனிமொழி தலைமை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share