×
 

கான்பூரை உலுக்கிய விமான விபத்து! பயிற்சி விமானம் வயலில் விழுந்ததில் 2 பைலட்டுகள் பலி!

விமானத்தில் இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த பயிற்சி பைலட் அபிஷேக் புஜாரி மற்றும் குஜராத்தைச் சேர்ந்த அனுபவமிக்க பயிற்றுநர் சச்சின் பாட்டியா ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இரு பைலட்டுகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் கங்கா பரேஜ் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கர்க் ஏவியேஷன் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் வழக்கமான பயிற்சிக்காக பறந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வயல் பகுதியில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தரையில் விழுந்த வேகத்தில் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த பயிற்சி பைலட் அபிஷேக் புஜாரி மற்றும் குஜராத்தைச் சேர்ந்த அனுபவமிக்க பயிற்றுநர் சச்சின் பாட்டியா ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்..! 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்..! உ.பி அரசு அறிவிப்பு..!

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. விமானம் புறப்பட்டதில் இருந்து விபத்து ஏற்பட்டது வரையிலான தொழில்நுட்ப விவரங்கள், வானிலை நிலவரம் மற்றும் விமானத்தின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நாட்டில் சமீப காலமாக பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதேபோல், கடந்த மே மாதம் மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் ரெட்பேர்ட் பிளைட் ட்ரெய்னிங் அகாடமிக்கு சொந்தமான பயிற்சி விமானம் தரையிறங்கும்போது கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக கான்பூர் விபத்தும் விமானப் பயிற்சிகளின்போது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு பேருமே புடிக்கும்! கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும்! அடம்பிடிக்கும் இளம்பெண்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share