×
 

1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

இதைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கர்நாடக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட அறிவிப்பின்படி, புகையிலை அல்லது நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா மற்றும் அதுபோன்ற பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனை ஆகியவை மாநிலம் முழுவதும் ஒரு ஆண்டு காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் பிரிவு 30(2)(a) மற்றும் 2011-ம் ஆண்டு விதிமுறைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குட்கா மற்றும் பான் மசாலாவை மட்டும் அல்ல, புகையிலை அல்லது நிகோடின் உள்ள எந்தவொரு பொருளையும் எந்தப் பெயரில் விற்றாலும் இந்தத் தடை பொருந்தும். பேக்கிங் செய்யப்பட்டவை, செய்யப்படாதவை, சாச்செட், பவுச், பாக்கெட், கன்டெய்னர் உள்ளிட்ட அனைத்து வடிவங்களும் இதில் அடங்கும். நுகர்வோர் எளிதாகக் கலந்து உபயோகிக்கும் வகையில் தனியாக விற்கப்படும் பொருட்களுக்கும் இது பொருந்தும்.

புகையிலை பயன்பாடு வாய், தொண்டை, நுரையீரல் உள்ளிட்ட பல உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று. குறிப்பாக குட்கா போன்ற மெல்லும் பொருட்கள் வாய் புற்றுநோய்க்கு அதிக ஆபத்தை உருவாக்குகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இதையும் படிங்க: கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் குட்கா மற்றும் பான் மசாலாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இப்போது இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் டி.கே. சிவக்குமார், இந்தப் பொருட்களில் போதைப்பொருட்கள் கலக்கப்படுவதாக தகவல் வந்தால் முழுத் தடை விதிப்பதாக எச்சரித்திருந்தார்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சிறப்பு ஆய்வுகளை நடத்தி, மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள். பொதுமக்களும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கலாம். இந்தத் தடை பொதுநலன் கருதி எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும். புகையிலை பயன்பாட்டைக் குறைத்து, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இது செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share