×
 

கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து கோர விபத்து! தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பரிதாப பலி! குடும்பமே சிதைந்த சோகம்!

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக பிரிட்ஜில் திடீரென அதிக மின் அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் வீட்டில் இருந்த ரெப்ரிஜிரேட்டர் எனப்படும் பிரிட்ஜ் திடீரென வெடித்ததில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த பிரிட்ஜில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வீட்டுக்குள் தீ வேகமாக பரவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கஜானன் தாமோன், 65, ரோஷன் தாமோன், 21, சாரதா தாமோன், 45, பாரதி தாமோன், 50, ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அமைச்சர் வன்னி அரசின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!

மேலும், ப்ரியா, 28, கங்கா, 25, ஆகிய இருவர் தீ விபத்தில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக பிரிட்ஜில் திடீரென அதிக மின் அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் விபத்துக்கான சரியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதால், குடும்பத்தினரால் உடனடியாக தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருட்களை முறையாக பராமரிப்பதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. பழைய அல்லது பழுதடைந்த மின்சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல், மின் இணைப்புகள் மற்றும் சாதனங்களை அவ்வப்போது தகுதியான நிபுணர்களிடம் பரிசோதனை செய்வது இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

இதையும் படிங்க: பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share