×
 

வேகவேகமாக டி.கே.சிவகுமார் எடுத்த பகீர் முடிவு... தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சி... என்ன செய்யப்போகிறார் விஜய்?

மேகதாது அணை திட்டத்திற்கு விரைவான ஒப்புதல் வழங்க வேண்டும் என பிரதமரிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தல்

கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் சமர்ப்பித்து, அதற்கு விரைவான ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த டி.கே. சிவகுமார், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான அறிக்கையை வழங்கியதுடன், திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை விரைவுபடுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், மறுஆய்வு மனுவும் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போதைய சூழ்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு எந்தவித தடையும் இல்லை என மத்திய அரசிடம் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலையா? விஜய்யா?... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்...!

மேலும், மேகதாது அணைத் திட்டத்தை மதிப்பீடு செய்யுமாறு காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய நீர்வள ஆணையத்திடம் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளதாகவும், எனவே திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார், மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என பலமுறை தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்றும், சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என்றும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, பிரதமரை நேரில் சந்தித்து திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ள டி.கே. சிவகுமார், மேகதாது அணைத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், கர்நாடகாவில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தேவையான ஒப்புதல்களை விரைவுபடுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேகதாது அணைத் திட்டத்திற்கான இறுதி வன அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது பகுதி வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், திட்டத்தை செயல்படுத்த வனத்துறை அனுமதி அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்து வரும் டி.கே. சிவகுமார், பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சரை சந்தித்து திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை விரைவாக வழங்குமாறு வலியுறுத்தியிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அறநிலையத்துறை அமைச்சரின் அடுத்த தரமான சம்பவம்... பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் அதிரடி ரெய்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share