×
 

மேகதாது அணை விவகாரம்... சீக்கிரம் ரெடி பண்ணுங்க..! திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி...!

மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கூறி கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மதிய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அது மட்டுமல்லாது காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் இருப்பதாகவும் புதிய அணை தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும் தொடர்ந்து அணைக்கட்டும் கர்நாடக அரசு முடிவுக்கு புதுச்சேரி, கேரளா அரசும் நீதிமன்றத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது.

தமிழக அரசின் வாதத்தை கேட்ட நீதிபதி, மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்தார். மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும்போது தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட்டின் பட்டாசு உத்தரவு: வாழ்வுரிமையை விட வெடிப்புரிமை முக்கியமானதா? அமிதாப் காந்த் கடும் விமர்சனம்..!!

திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என்பதை தெளிவுபடுத்துவதாகவும், மேகதாது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுகளும் முடித்து வைக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: ஏமனில் கேரள நர்ஸ் தொடர்பான வழக்கு..!! மரண தண்டனை நிறுத்திவைப்பு.. உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share