×
 

தவெக கட்சியே இல்ல... என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு கார்த்தி சிதம்பரம்...?

தமிழக வெற்றி கழகம் இன்னும் ரசிகர் மன்றமாகவே செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய கரூர் சம்பவம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. நடந்த உண்மையை கண்டறிய தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் முறையாக விதிகளை பின்பற்றவில்லை என காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. விஜய் ஏன் தாமதமாக வந்தார் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே பொதுச் சொத்துக்களை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்து பேசினார். ஒரு நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பொறுப்பு உள்ளது என்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு command and control ஸ்ட்ரக்ச்சர் இல்லை எனவும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் இன்னும் ரசிகர் மன்றமாகவே செயல்படுவதாகவும் இன்னும் முழுமையான அரசியல் கட்சியாக மாறவில்லை என்றும் விமர்சித்தார். அப்படி முழுமையான கட்சியாக தவெக மாறி இருந்தால் மாநில அளவில், மாவட்ட அளவில் இருக்கும் நிர்வாகிகள் கூறும் சொல்லுக்கு கட்டுப்படும் அளவில் தொண்டர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

அதே இடத்தில் தான் அதிமுக கூட்டம் நடத்தியதாகவும், ஆனால் அப்போது கட்டுப்பாட்டோடு இருந்ததாகவும் குறிப்பிட்டார். ஏனென்றால் அதிமுகவில் சொல்லும் சொல்லிற்கு அடிபணியும் அளவில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி…!

பாஜகவின் குழு உள்நோக்கத்தோடு வந்திருந்ததாகவும், யார் மீது பழி போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு வந்திருந்ததாகவும் தெரிவித்தார். டெல்லி கூட்டம் நெரிசல், கும்பமேளா உயிரிழப்புகள், பெங்களூரு கூட்ட நெரிசல் என எந்த இடத்திற்கும் செல்லாதவர்கள் இங்கு வந்துள்ளார்கள் என்றால் அடுத்த வருடம் நடக்கும் தேர்தல்தான் காரணம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share