மைசூர் பாக் பெயரை மாத்தினவங்க வடிக்கட்டுன முட்டாள்கள்.. திட்டித்தீர்த்த கார்த்தி சிதம்பரம்!!
மைசூர் பாக் என்ற பெயரை மைசூர் ஸ்ரீ என மாற்றிய ஜெய்ப்பூர் பேக்கரி கடைக்காரரை சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இதற்கிடையே பாக் என்பது பாகிஸ்தானை குறிப்பதாக கூறி இனிப்பு வகைகளில் ஒன்றான மைசூர் பாக் என்ற பெயரை மைசூர் ஸ்ரீ என மாற்றி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பேக்கரி கடைக்கார் விற்பனை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: தொடரும் மர்மம்.. ஆட்டிசம் பாதிப்பு இளைஞர் உடல் தோண்டியெடுப்பு.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!
அதுமட்டுமின்றி கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் உள்ளிட்டவற்றின் பெயர்களும் கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ என்று பெயர்களை மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இன்னொரு தரப்பினர் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த பெயர் மாற்றத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், அட வடிகட்டுன முட்டாள்களா என்று தெரிவித்துள்ளார்.
அதாவது பாக் என்ற வார்த்தைக்கு பதில் ஸ்ரீ என்ற வார்த்தையை பயன்படுத்தி மைசூர் பாக் பெயரை மைசூர் ஸ்ரீ என மாற்றிவர்களை முட்டாள்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காரணம் மைசூர் பாக் பாகிஸ்தானை குறிப்பது அல்ல. அது கர்நாடகா மாநிலம் மைசூர் அரண்மனையில் முதல் முதலாக தயார் செய்யப்பட்ட இனிப்பு வகையை சேர்ந்தது. கன்னட மொழியில் இனிப்புக்கு பாகு என்று பொருள். இதனால் மைசூர் பாகு என்று பெயர் வைக்கப்பட்டது. இது நாளடைவில் மைசூர் பாக் என்று ஆனது. இதனை மைசூர் ஸ்ரீ என மாற்றியது முட்டாள் தனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண்களை 'அந்த மாதிரி' வீடியோ எடுத்த இளசுகள்.. சிக்கிய 2 பேர்.. மேலும் இருவருக்கு வலைவீச்சு..!